Home Uncategorized இங்கிலாந்து இளவரசர் வில்லியம் குழந்தைக்கு ஜேம்ஸ்–விக்டோரியா பெயர்: பொதுமக்கள் ஆர்வம்

இங்கிலாந்து இளவரசர் வில்லியம் குழந்தைக்கு ஜேம்ஸ்–விக்டோரியா பெயர்: பொதுமக்கள் ஆர்வம்

784
0
SHARE
Ad

லண்டன், ஜூலை 16– இங்கிலாந்து இளவரசர் வில்லியம்–இளவரசி கேத் மிடில்டனுக்கு பிறக்கப்போகும் குழந்தைக்கு ‘விக்டோரியா’ அல்லது ‘ஜேம்ஸ்’ என்று பெயர் சூட்டக்கோரி பொதுமக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்–டயானா தம்பதியரின் மூத்த மகன் இளவரசர் வில்லியம். இவரது மனைவி இளவரசி கேத்மிடில்டன்.

prince_william_kate_middletonஇளவரசி கேத் மிடில்டன் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வருகிறார். அவருக்கு வரும் சனிக்கிழமை குழந்தை பிறக்கும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

இந்நிலையில் இங்கிலாந்து விமானப்படையில் பணியாற்றி வரும் இளவரசர் வில்லியம், மனைவி கேத்மிடில்டனுக்கு ‘டெலிவரி’ தேதி நெருங்கியுள்ளதால் விமானப்படை பணியில் இருந்து விடுமுறை பெற்று குழந்தை பெற்றுக்கொள்ளப் போகும் மனைவி அருகில் இருந்து கவனித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இங்கிலாந்து அரச குடும்பத்தில் பிறக்கப்போகும் குழந்தை ஆணா? பெண்ணா? அந்த குழந்தைகளுக்கு என்ன பெயர் சூட்டப் பொகிறார்கள் என்கிற விவாதம் சூடுபிடித்துள்ளது.

ஆணாக பிறந்தால் ‘ஜேம்ஸ்’ என்றும், பெண்ணாக பிறந்தால் ‘விக்டோரியா’ என்றும் பெயர் சூட்ட வேண்டும் என்று பெரும்பாலான பொதுமக்கள் கருத்து தெரிவித்ததாக ‘தி சண்டே டைம்ஸ்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.