Home நாடு தர்மேந்திரன் கொலையில் சம்பந்தப்பட்டுள்ள அந்த நாலாவது அதிகாரி எங்கே? – லிம் லிப் கேள்வி

தர்மேந்திரன் கொலையில் சம்பந்தப்பட்டுள்ள அந்த நாலாவது அதிகாரி எங்கே? – லிம் லிப் கேள்வி

587
0
SHARE
Ad

lim lipகோலாலம்பூர், ஜூலை 16 –  தர்மேந்திரன் கொலையில் சம்பந்தப்பட்ட அந்த நாலாவது காவல்துறை அதிகாரியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடந்த மே மாதம் 22 ஆம் தேதி, சந்தேகத்தின் பேரில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட தர்மேந்திரன், மர்மமான முறையில் இறந்தார். ஆனால் பிரேத பரிசோதனையில் அவரது உடம்பில் சித்திரவதை செய்யப்பட்டதற்கான காயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால், தடுப்புக்காவலில் இறந்த தர்மேந்திரன், கொலை செய்யப்பட்டதாகக் கூறி, அவரது மரணத்தில் சம்பந்தப்பட்ட 3 காவல்துறை அதிகாரிகள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது.

#TamilSchoolmychoice

ஆனால், இக்கொலையில் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நாலாவது காவல்துறை அதிகாரி, கடந்த 41 நாட்களாக தலைமறைவாக உள்ளார். அவரைப் பிடிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் காவல்துறை கூறி வருகிறது.

இந்நிலையில், எதிர்கட்சியைச் சேர்ந்த செகாம்புட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் (படம்), காவல்துறை இவ்விவகாரத்தில் எதையோ மூடி மறைக்கிறது என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.

“தலைமறைவாக இருக்கும் அந்த 4 வது காவல்துறை அதிகாரியின் பின்னால் ஒரு பெரிய கதை இருப்பதாக நான் சந்தேகப்படுகிறேன். இல்லையென்றால், காவல்துறை ஏன் அவரின் படத்தை வெளியிட மறுக்கிறது” என்று லிம் லிப் கூறியுள்ளார்.

கடந்த ஜூன் மாதம் 12 ஆம் தேதி, தர்மேந்திரன் கொலையில் சம்பந்தப்பட்ட 4 வது அதிகாரியின் புகைப்படத்தை வெளியிட வேண்டும் என்று கூறி, லிம் லிப் காவல்துறையில் புகார் ஒன்றை அளித்தார். ஆனால் இதுவரை காவல்துறை அவரது புகைப்படத்தை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், குற்றப்புலனாய்வுத் துறை துணை இயக்குனரான அப்துல் சாமா மாட் இது குறித்து கூறுகையில், “ நாங்கள் அவரை கட்டாயம் பிடித்துவிடுவோம். அதற்கான தேடுதல் வேட்டையும் நடைபெற்று வருகிறது. அதற்கு கொஞ்சம் அவகாசம் தேவை” என்று கூறியுள்ளார்.