Home நாடு “அந்த வலைப்பதிவாளர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுங்கள்” – இப்ராஹிம் அலி

“அந்த வலைப்பதிவாளர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுங்கள்” – இப்ராஹிம் அலி

909
0
SHARE
Ad

Ibrahim-Ali---Sliderகோலாலம்பூர், ஜூலை 17 – இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் படியான படங்களை பதிவேற்றம் செய்த ஆல்வின் டான் மற்றும் விவியான் லீ ஆகிய இருவரும் மன்னிப்பு கோரினால் மட்டும் போதாது, தக்க தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று பெர்காசா அமைப்பின் தலைவர் இப்ராகிம் அலி கூறியுள்ளார்.

“முதலில் அவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுத்து நீதிமன்றத்தில் நிறுத்துங்கள்.அதன் பிறகு நீதிமன்றம் முடிவு எடுக்கட்டும்” என்று இப்ராகிம் அலி கூறியுள்ளதாக உத்துசான் மலேசியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

‘ஆல்விவி’ என்ற பெயரில் உள்ள தங்களது வலைத்தளத்தில் அவ்வப்போது சர்ச்சைக்குரிய படங்களை பதிவேற்றம் செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்துவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கும் இந்த ஜோடி, கடந்த வாரம் வியாழக்கிழமை, “பக்குத்தேவுடன் நோன்பு திறக்க வாருங்கள். நல்ல வாசனையுடன் ஹலால் முத்திரை கொண்ட சுவையான உணவு” என்று கூறினர்.

#TamilSchoolmychoice

அதுமட்டுமின்றி, கடந்த ஞாயிற்றுக்கிழமை பன்றி இறைச்சியுடன் ‘ஹலால்’ முத்திரை வைத்த படங்களைத் தங்கள் முகநூலில் பதிவேற்றம் செய்து மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தினர்.

இதனிடையே, இந்த வலைப்பதிவர்களுக்கு எதிராக தேசிய முன்னணி மற்றும் எதிர்கட்சிகளை சேர்ந்த பல தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளதாக ‘பெரித்தா ஹரியான்’ நாளிதழும் செய்தி வெளியிட்டுள்ளது.

தேசிய முன்னணியைச் சேர்ந்த கினாபாத்தாங்கான் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்  பங் மொக்தார்  ராடின் இது குறித்து கூறுகையில், இவ்விவகாரத்தில் எந்தவித பாரபட்சமும் இன்றி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதே போல், எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம், இது போன்ற மற்ற மதங்களை இழிவு படுத்தும் வலைபதிவாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் தாமதம் காட்டக்கூடாது என்று கூறியுள்ளார்.