Home உலகம் நெல்சன் மண்டேலாவின் 95வது பிறந்தநாளையொட்டி அவருக்கு புகழாரம் சூட்ட இன்று ஐ.நா. சிறப்பு கூட்டம்

நெல்சன் மண்டேலாவின் 95வது பிறந்தநாளையொட்டி அவருக்கு புகழாரம் சூட்ட இன்று ஐ.நா. சிறப்பு கூட்டம்

751
0
SHARE
Ad

லண்டன், ஜூலை 18- நெல்சன் மண்டேலாவின் 95வது பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் இன்று ஐ.நா. சபையின் சிறப்பு கூட்டம் கூடுகிறது.

நெல்சன் மண்டேலா சர்வதேச தினமான இன்று இந்த சிறப்பு கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஐ.நா.பொதுச் செயலாளர் பான் கீ-மூன் செய்துள்ளார்.
NelsonMandela1707e
‘மனித உரிமைக்காகவும், சமூக நீதிக்காகவும் தனது வாழ்நாளில் 67 ஆண்டுகளை போராட்டத்தில் செலவிட்டவர், நெல்சன் மண்டேலா.

அவரது பிறந்த நாளான இன்று எங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதுடன் நெல்சன் மண்டேலா அறக்கட்டளையின் அறிவிப்பின்படி இன்றைய நாளின் 67 நிமிடங்களை நற்பணிகளுக்காக செலவிடும்படி கேட்டுக் கொள்கிறேன்.

#TamilSchoolmychoice

மனித நேயத்தின் உன்னதத்தை உலகுக்கு உணர்த்திய உயர்ந்த மனிதருக்கு இதன்மூலம் மட்டுமே நாம் சிறந்த மரியாதை செய்ய முடியும்’ என பான் கி-மூன் இன்று வெளியிட்ட பிறந்த நாள் வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

ஐ.நா. சபை கூட்ட அரங்கில் இன்று அதிகாலை தொடங்கும் இந்த சிறப்பு கூட்டத்தில் அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், ரெவெண்ட்ஜெசி ஜாக்சன், பாடகரும் நடிகரும் சமூக சேவகருமான ஹாரி பெலாஃபோன்ட்டே உள்ளிட்ட பிரமுகர்கள் பங்கேற்று நெல்சன் மண்டேலாவின் சேவைகளை பாராட்டி புகழாரம் சூட்டி பேசுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.