ஜூலை 19- நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கிய ‘முனி’, முனி 2-ம் பாகம் ‘காஞ்சனா’ படங்கள் வெளியாகி வெற்றிப்பெற்றாதை தொடர்ந்து தற்போது ‘முனி 3-ம் பாகம்’ இயக்கும் முயற்சியில் தீவிரமாக களமிறங்கியுள்ளார்.
இந்நிலையில், ‘முனி 3’ படத்திற்கு தான் இசையமைக்கப் போவதில்லை என அனிருத் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
முனி 3- படத்திற்கு இசையமைக்க நேரம் ஒத்துவரவில்லை என்ற காரணத்தினாலேயே இவர் இந்த படத்தில் இருந்து ஒதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
‘3’, ‘எதிர்நீச்சல்’ படங்களின் பாடல்கள் வெற்றியடைந்ததை அடுத்து அனிருத்-ஐ, தங்கள் படங்களில் இசையமைக்க முன்னணி இயக்குனர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
அனிருத் தற்போது கிருத்திகா உதயநிதி இயக்கும் ‘வணக்கம் சென்னை’ படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
மேலும், கே.வி.ஆனந்த், ஏ.ஆர்.முருகதாஸ், எல்.ரெட் குமார் ஆகியோர் இயக்கும் படங்களுக்கும் இசைமைக்க ஒப்புக் கொண்டுள்ளார்.
இதன் காரணமாகவே முனி-3 படத்திலிருந்து விலகியிருப்பதாக கூறப்படுகிறது.