லண்டன், ஜூலை 19– இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ் மனைவி கேத்தே மிடில்டன். கர்ப்பிணியான இவர் பிரசவத்துக்காக லண்டன் செயிண்ட்மேரிஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு கடந்த வாரம் சனிக்கிழமையே குழந்தை பிறக்கும் என்று டாக்டர்கள் நாள் குறித்து இருப்பதாக தகவல் வெளியானது.
ஆனால் குழந்தை பிறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து அரச குடும்பத்தினர் அரண்மனைக்கு வரப்போகும் புதிய வாரிசை ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.
குழந்தை பிறந்த தகவலை கேட்கும் ஆவலில் அரச குடும்பத்தினர் டெலிபோன் அருகில் காத்திருக்கிறார்கள். இதேபோல் இங்கிலாந்து மக்கள் மட்டும் அல்லாது உலகம் முழுவதும் கேத்தேயின் பிரசவ செய்தியை கேட்க ஆவலில் உள்ளனர்.
கேத்தேக்கு ஆண் குழந்தை பிறக்குமா? பெண் குழந்தை பிறக்குமா? என்று இங்கிலாந்தில் பெரிய அளவில் சூதாட்டம் நடக்கிறது. குழந்தைக்கு பெயர்களை தேர்வு செய்தும் அனுப்பி வைத்துள்ளனர்.
கேத்தே அனுமதிக்கப்பட்டுள்ள ஆஸ்பத்திரிக்கு இளவரசர் வில்லியம்ஸ் தினமும் ஹெலிகாப்டரில் சென்று கவனித்து வருகிறார். ஆஸ்பத்திரி முன் 180–க்கும் மேற்பட்ட போட்டோ கிராபர்கள் செய்தியாளர்கள் செய்தி சேகரிப்பதற்காக குவிந்துள்ளனர்.
எந்த நேரத்திலும் கேத்தே பிரசவ அறைக்கு அழைத்துச் செல்லப்படுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் பிரசவ தேதி ரகசியமாக வைக்கப் பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
வருகிற 23–ந்தேதிக்குப்பின் கேத்தேக்கு குழந்தை பிறந்தால் அது சிம்மராசியில் அமையும் என்று சிலர் கணித்து சொல்லியுள்ளனர்.
குழந்தை பிறப்புக்காக ராணுவத்தில் இருந்து விடுமுறையில் வந்துள்ள இளவரசர் வில்லியம் எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஓய்வு கிடைக்கும் போதெல் லாம் சகோதரர் ஹாரியுடன் போலோ விளையாடி பொழுதை கழிக்கிறார்.