Home வாழ் நலம் பல் அழகே பாதி அழகு

பல் அழகே பாதி அழகு

569
0
SHARE
Ad

ஜூலை 19- பல் பராமரிப்பு குறித்து இதுவரை மருத்துவ உலகம் அவ்வப்போது புதிய கருத்துகளை வாரி வழங்கி கொண்டேயிருக்கின்றது.

நன்றாக பல் தேய்க்க வேண்டும் என்ற கருத்துக்கு மாற்றாக, அதிகமாக தேய்த்தால் பல் எனாமல் போய்விடும் என்ற கருத்து உருவானது. இது தவிர விளம்பரங்களில் வர்ணிக்கப்படும் பற்பசை, ‘பிரஷ்’ போன்றவற்றின் சிறப்பு பெருமைகளை பல் மருத்துவ நிபுணர்கள் உண்மைக்கு புறம்பானவை என்கின்றனர். அனைத்து தரப்பிலும் விரிவாக ஆராய்ந்து பல் மருத்துவ நிபுணர்கள் பல் பராமரிப்புக்கு தந்துள்ள பட்டியல்.

teeth-whitening-melbourne6 முதல் 12 மாதங்களுக்கு ஒரு முறை பல் மருத்துவரை சந்திக்க வேண்டும். பல் மருத்துவமனையில் பற்களை சுத்தம் செய்ய வேண்டும்.

#TamilSchoolmychoice

மென்மையான பிரஷ்ஷை கொண்டு பற்களை மெதுவாக சுத்தம் செய்ய வேண்டும்.

புளோரைடு கலந்த பற்பசையை உபயோகித்து பற்குழி ஏற்படும் அபாயத்தை தவிர்க்க வேண்டும். நமக்கும், பல்லுக்கும் தேவைப்படும் ப்ளோரைடின் அளவை நிர்ணயிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட பல் மருத்துவ நிபுணரை நாட வேண்டும். ஏனெனில் ப்ளோரைடு என்பது அதிகமானாலும் குறைந்தாலும் நோய் ஏற்படுத்தும் ஒரு வேதிப்பொருளாகும்.

பிரஷை 45 டிகிரி சாய்வாக பயன்படுத்த வேண்டும். எந்தவொரு உணவை சாப்பிட்டாலும் பானங்களை குடித்தாலும் வாயை நன்றாக கொப்பளிப்பதை வழக்கமாக கொள்ள வேண்டும்.

சாதாரண பல் தேய்க்கும்  பிரஷினால் வாயின் உட்பகுதிகளை சுத்தம் செய்ய இயலாத நிலை இருக்குமாயின், பல் மருத்துவ நிபுணர்களை கலந்து ஆலோசித்து அதற்கென மருந்து கடைகளில் உள்ள எளிய, சிறப்பு கருவிகளை வாங்கி உபயோகிக்க வேண்டும்.

நார்ச்சத்து மிகுந்துள்ள உணவு பொருட்களை சாப்பிடுவது பல்லிற்கு நலம் அளிக்கும்.

பல், ஈறு சம்பந்தமான எந்தவொரு இடையூறுக்கும் நேரடியாக மருந்து கடைகளுக்கு சென்று மருந்து வாங்கி சாப்பிடுவதை தவிர்த்து, பல் மருத்துவ நிபுணரிடம் சென்று மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.