Home இந்தியா உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சதாசிவம் இன்று பதவி ஏற்பு: அரசியல் கட்சிகள் வாழ்த்து

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சதாசிவம் இன்று பதவி ஏற்பு: அரசியல் கட்சிகள் வாழ்த்து

522
0
SHARE
Ad

சென்னை, ஜூலை 19-உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி ப.சதாசிவம் இன்று பதவியேற்பதையொட்டி அரசியல் கட்சிகள் வாழ்த்து தெரிவித்துள்ளன.

JUSTICE_P__SATHASI_1502512f

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

#TamilSchoolmychoice

120326061730_Vijayakanth-1உச்சநீதிமன்றத்தின் வரலாற்றில் சுமார் 60 ஆண்டுகளுக்கு பிறகு, தமிழர் ஒருவர் தலைமை நீதிபதியாக பதவியேற்க இருப்பது தமிழகத்திற்கும், உலகெங்கும் வாழுகின்ற தமிழர்களுக்கும் மகிழ்ச்சி அளிப்பதோடு, பெருமைக்குரிய விஷயமும் ஆகும்.

இன்று (வெள்ளிக்கிழமை)உச்சநீதிமன்றத்தின்   40-வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கவுள்ள நீதிபதி ப.சதாசிவத்தின் பணி சிறக்க, தமிழக மக்கள் சார்பாகவும், எனது சார்பாகவும் உளமார வாழ்த்துகின்றேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவின் தலைமை நீதிபதியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதிபதி சதாசிவம் பொறுப்பேற்றது தமிழர்கள் அனைவருக்கும் கிடைத்த பெருமை.

அவர் தனது பதவிக்காலத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்புகளை வழங்கி என்றென்றும் நிலைத்த புகழுடன் விளங்க வேண்டும் என நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தனது நடுநிலைமையாலும் உழைப்பாலும் இத்தகு உயர்ந்த நிலைக்கு நீதிபதி சதாசிவம் உயர்ந்துள்ளார். நீதிபதி சதாசிவம் சில மாதங்கள் மட்டுமே இந்தப் பதவியை வகிக்க இருக்கிறார்.

இருந்தாலும் அவர் தனது பதவிக் காலத்தில் மக்களுக்கு நலம்பயக்கும் மகத்தான தீர்ப்புகளை வழங்குவார் என்ற நம்பிக்கை நமக்கு ஏற்படுகிறது.

தமிழகத்தில் பிறந்து இந்திய நாட்டின் தலைமை நீதிபதியாக உயர்ந்திருக்கும் நீதிபதி ப.சதாசிவம் உடல் நலத்தோடும், மகிழ்ச்சியோடும் தனது பணிகளைச் செய்து உலகமெங்கும் புகழ் சிறக்க வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

புதிய நீதிக் கட்சி நிறுவனர் தலைவர் ஏ.சி.சண்முகம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

உச்சநீதிமன்றத்தின்  40-வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கும் தமிழகத்தைச் சேர்ந்த முதல் தமிழரான நீதிபதி ப.சதாசிவத்தால் தமிழகமே ஏன்? உலகத்தமிழர்கள் அனைவரும் இன்றைய தினம் பெருமிதம் கொள்கின்றனர். தமிழ்நாடே மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

சுதந்திரம் பெற்று 67-வது ஆண்டில், முதன் முறையாக தமிழகத்தைச் சேர்ந்தவர், இந்த மிக உயரிய பதவியை வகிக்கவிருப்பது, நமக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவமாகும். பல சிறப்புகளை படைத்த நீதிபதி ப.சதாசிவத்திற்கு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.