Home நாடு ஆல்விவிக்கு பிணை வழங்க மறுப்பது ‘கொடுமையானது’ – வழக்கறிஞர்கள் கருத்து

ஆல்விவிக்கு பிணை வழங்க மறுப்பது ‘கொடுமையானது’ – வழக்கறிஞர்கள் கருத்து

613
0
SHARE
Ad

alvin sex bloggerகோலாலம்பூர், ஜூலை 20 – ஆபாச வலைப்பதிவாளர்களான ஆல்வின் டான் மற்றும் விவியான் லீ ஆகியோருக்கு நீதிமன்றம் பிணை வழங்க மறுப்பது கொடுமையானது என்று வழக்கறிஞர்கள் பலர் கருத்து கூறுகின்றனர்.

இது போன்று சிறிய குற்றங்களுக்கு பிணை வழங்க மறுப்பது மிகவும் அரிதானது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

“இது மிகவும் கொடுமையானது…  இவர்கள் செய்த குற்றங்கள் திரைப்பட தணிக்கை சட்டத்தின் கீழ் வருகிறது. அது ஒன்றும் அத்தனை கொடிய குற்றங்கள் இல்லை. ‘பிரமுகாரா தெர்லம்பாவ்’ வழக்கிலேயே பிணை வழங்கப்பட்ட போது இவர்களுக்கு வழங்குவதில் எந்த பிரச்சனையும் இல்லை” என்று வழக்கறிஞர் அமர் ஹம்சா அர்ஷத் கடந்த 2003 ஆம் ஆண்டு நடந்த வழக்கு ஒன்றை சுட்டிக்காட்டியுள்ளார்.

#TamilSchoolmychoice

கடந்த 2003 ஆம் ஆண்டு முன்னாள் விமான பணியாளரான முகமட் ரிசால் மட் யூசோப்,பல விமான பணிப்பெண்களை வைத்து ‘கெஹிடுப்பான் பிரமுகாரா யங் தெர்லம்பாவ்’ என்ற பெயரில் ஆபாச காணொளி ஒன்றை வெளியிட்ட குற்றத்திற்காக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். அவ்வழக்கில் நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், முகமட் ரிசால் மீது திரைப்பட தணிக்கை சட்டப்படி இல்லாமல் குற்றவியல் சட்டம் 292(a) என்ற பிரிவின் கீழ் மட்டுமே வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ஆனால் டான் மற்றும் லீ ஆகிய இருவர் மீதும் தேச நிந்தனைச் சட்டத்தின் 1948 இடைப்பிரிவு 4(1)(c), குற்றவியல் சட்டம் 298A (1)(a) மற்றும் திரைப்பட தணிக்கை சட்டத்தின் 2002 இடைப்பிரிவு 5(1) ஆகிய பிரிவுகளின் கீழ் வலைத்தளத்தில் ஆபாச படங்களைப் பதிவு செய்தார்கள் என்று வழக்குப் பதிவு செய்யபட்டுள்ளது.

திரைப்பட தணிக்கை சட்டத்தின் 2002 இடைப்பிரிவு 5(1) என்ற சட்டத்தின் படி குற்றம் சாட்டப்பட்டவருக்கு பிணை வழங்க முடியாது என்று அமர்வு நீதிமன்றம் நேற்று கூறியுள்ளது.

இது குறித்து மேலும் அமர் ஹம்சா கூறுகையில், “நீதிமன்றம் ஆல்விவியின் குற்றங்களை, கொலைக் குற்றம் போல் கருதி பிணை வழங்க மறுக்கிறது” என்று கூறியுள்ளார்.

மேலும், “கற்பழிப்பு வழக்கில் கூட பிணை வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் சுக்மா விளையாட்டில் கற்பழிப்பு வழக்கில் சிக்கிய 3 விளையாட்டாளர்களுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.