Home கலை உலகம் நடிகை ஹன்சிகாவை காதலிப்பது உண்மை: சிம்பு திடீர் அறிவிப்பு

நடிகை ஹன்சிகாவை காதலிப்பது உண்மை: சிம்பு திடீர் அறிவிப்பு

691
0
SHARE
Ad

ஜூலை  21- சிம்புவும், ஹன்சிகாவும் காதலிப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. இருவரும் வாலு மற்றும் வேட்டை மன்னன் படங்களில் ஜோடியாக நடிக்கிறார்கள்.

அப்போது நெருக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. சிம்பு அடிக்கடி ஐதராபாத் சென்று ஹன்சிகாவை சந்தித்து காதல் வளர்ப்பதாகவும் செய்திகள் உலவின. இதற்கு இருவரும் பதில் அளிக்காமல் இருந்தனர். இதனால் காதலிப்பது உறுதிதான் என பேசப்பட்டது.

hansika-simbu_660_072013121317சிம்புவின் தந்தையும், திரைப்பட இயக்குனருமான  டி.ராஜேந்தரிடம் சமீபத்தில் இதுகுறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், சிம்பு யாரை திருமணம் செய்து கொள்ள விரும்பினாலும் ஏற்றுக் கொள்வேன். அது ஹன்சிகாவாக இருந்தாலும் சந்தோஷம்தான் என்றார்.

#TamilSchoolmychoice

இதனால் இவ்விவகாரம் மேலும் சூடுபிடித்தது. இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கும் என பேச்சு அடிபட்டது. ஆனால் இரு தினங்களுக்கு முன்பு ஹன்சிகா இதனை மறுத்தார். சிம்புவும் நானும் நண்பர்களாகத்தான் பழகுகிறோம் என்றார். இதனால் இருவரும் காதல் முறிந்து பிரிந்துவிட்டதாக செய்தி பரவியது. இந்த நிலையில் சிம்புவும் ஹன்சிகாவும் இன்று டூவிட்டர் இணைய தளத்தில் தங்கள் காதலை பகிரங்கமாக அறிவித்தார்கள்.

simbu-hansikaஹன்சிகா தனது டூவிட்டரில் என் சொந்த வாழ்க்கை பற்றி டூவிட்டரில் பல விதமான வதந்திகள் பரவுகின்றன. இப்போது என் நிலையை சொல்கிறேன். நான் சிம்புவை காதலிப்பது உண்மைதான். ஆனாலும் எனது சொந்த வாழ்க்கை குறித்து தற்போது எதுவும் கூற விரும்பவில்லை என்று குறிப்பிட்டு உள்ளார்.

இதையடுத்து சிம்புவும் தனது டூவிட்டரில் நானும் ஹன்சிகாவும் சேர்ந்து பழகுவது உண்மைதான். ஹன்சிகா என்னுடன் நன்றாக இருக்கிறார். எங்கள் திருமணம் பற்றி பெற்றோர் விரைவில் பேசி முடிவு செய்வார்கள். எனது சொந்த வாழ்க்கை பற்றி தவறான செய்திகளை ஊடகங்களில்  வெளியிட வேண்டாம் என்று குறிப்பிட்டு உள்ளார்.