Home கலை உலகம் தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்: சிறந்த நடிகர், பாடகர் விருதை வென்றார் தனுஷ்

தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்: சிறந்த நடிகர், பாடகர் விருதை வென்றார் தனுஷ்

615
0
SHARE
Ad

ஜூலை 22- இந்தியாவின் புகழ்பெற்ற தென்னிந்திய திரைப்பட விருது விழாக்களில் ஒன்றான ஐடியா 60 வது பிலிம்பேர் விருது விழா நேற்று ஐதராபாத்தில் பிரம்மாண்டமாக நடந்தது.

இவ்விழாவில் கடந்த வருடத்திற்கான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள சினிமாக்களின் மிகச்சிறந்த கலைஞர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன.

1069975_562404310491359_642646768_nகடந்த வருடத்தின் சிறந்த நடிகர் மற்றும் பின்னணி பாடகர் ஆகிய 2 விருதுகளும் நடிகர் தனுஷுக்கு கிடைத்தது. ‘3’ படத்திற்காக இந்த 2 விருதுகளும் கிடைத்தது.

#TamilSchoolmychoice

சிறந்த நடிகைக்கான விருது தமிழ், தெலுங்கு இரண்டிலும் சமந்தாவுக்கு கிடைத்தது. தமிழில் ‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்திற்காகவும் தெலுங்கில், ‘ஈகா’ என்ற படத்திற்காகவும் இந்த விருதை பெற்றார். கன்னடத்தில் ‘சாருலதா’ திரைப்படத்திற்காக பிரியாமணிக்கு இவ்விருது கிடைத்தது.

சிறந்த இயக்குனருக்கான விருது தெலுங்கில் ‘ஈகா’ படத்திற்காக ராஜமௌலியும், தமிழில் ‘வழக்கு எண் 18/9’ படத்திற்காக பாலாஜி சக்திவேலும் பெற்றனர்.

சிறந்த திரைப்படமாக தமிழில் ‘வழக்கு எண் 18/9’, தெலுங்கில் ‘ஈகா’, மலையாளத்தில் ‘ஆயலும் ஞானமும் தம்மில்’, கன்னடத்தில் ‘கிராந்தீவீரா சாங்கோலி ராயன்னா’ ஆகிய படங்கள் தேர்வாயின.

சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை தெலுங்கில் தேவிஸ்ரீ பிரசாத், தமிழில் டி.இமான் (கும்கி), மலையாளத்தில் வித்யாசாகர் பெற்றனர்.

வாழ்நாள் சாதனையாளர் விருது வாணி ஜெயராம், பாபு ஆகியோருக்கு கிடைத்தது. நேற்றைய விழாவில் ஸ்ருதிஹாசன், நாவ்யா நாயர், ஷர்மிலா மந்திரே ஆகியோரது நடனங்களும் இடம்பெற்றிருந்தன.