Home நாடு “இஸ்லாம் அவமதிப்பு” கடத்தல் குற்றத்தில் 4 பேர் மீது வழக்கு!

“இஸ்லாம் அவமதிப்பு” கடத்தல் குற்றத்தில் 4 பேர் மீது வழக்கு!

505
0
SHARE
Ad

Ng-Mun-Tatt2கோலாலம்பூர், ஜூலை 22 –  ங் மன் தட் என்ற 21 வயது வாலிபரைக் கடத்திய குற்றத்தில் தொடர்புள்ளதாக சந்தேகிக்கப்படும் 4 பேர் இன்று நீதிமன்றத்தில் நிறுத்தப்படவுள்ளனர். இஸ்லாம் மதத்தை அவமதித்தது தொடர்பாக இவ்வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டேல் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடத்தல் குற்றம் 1961 ன் படி அவர்கள் 4 பேர் மீது இன்று ஷா ஆலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இவ்வழக்கில் இன்னும் இருவர் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் அப்துல் கனி குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

ங் மன் தட் கடந்த வாரம் ஒரு கும்பலால் கடத்தப்பட்டு, ஆடைகள் களையப்பட்டு, துன்புறுத்தப்பட்டார். அவரது உடம்பில் “சய ஹினா இஸ்லாம்”  “நான் இஸ்லாமை அவமதித்தேன்” என்று எழுதியுள்ளனர். இச்செயலை 8 பேர் செய்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் அவர்களுக்கும் ஆல்விவி என்ற ஆபாச வலைத்தள ஜோடிக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்றும் கூறப்படுகிறது.

மேலும் விரிவான செய்திகள் தொடரும்…