Home வணிகம்/தொழில் நுட்பம் உலகின் தலைசிறந்த டாக்சியாக ‘இந்தியாவின் பெருமிதம்’ என்றழைக்கப்படும் அம்பாசிடர் கார் தேர்வு

உலகின் தலைசிறந்த டாக்சியாக ‘இந்தியாவின் பெருமிதம்’ என்றழைக்கப்படும் அம்பாசிடர் கார் தேர்வு

681
0
SHARE
Ad

லண்டன், ஜூலை 22-புதிது புதிதாக ஆயிரம் தான் நவீன-சொகுசு கார்கள் நாள்தோறும் அறிமுகப்படுத்தப்பட்டாலும் பாதுகாப்புக்கும் வசதிக்கும் அம்பாசிடர் காருக்கு இணையாக வேறு எந்த காரும் இருக்க முடியாது என சில மூத்த குடிமக்கள் பெருமையாக குறிப்பிடுவதுண்டு.

968998_495725367186964_1062793006_nமூத்தோர் வாக்கு பொய்த்ததில்லை என்ற முதுமொழி தற்போது மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த பி.பி.சி. தொலைக்காட்சி ஒளிபரப்ப இருக்கும் உலகின் தலைசிறந்த டாக்சி தொடர்பான நிகழ்ச்சியில், மற்ற தயாரிப்புகளை பின்னுக்குத் தள்ளி ‘இந்தியாவின் பெருமிதம்’ என்றழைக்கப்படும் அம்பாசிடர் கார் முதலிடத்தை பிடித்துள்ளது.

#TamilSchoolmychoice

M_Id_403681_Ambassadorஇங்கிலாந்து, அமெரிக்கா, ஜெர்மனி, தென் ஆப்பிரிக்கா, மெக்சிக்கோ, ரஷ்யா ஆகிய நாடுகளை சேர்ந்த கார்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி உலகின் தலைசிறந்த டாக்சி என்ற இந்த அரிய பெருமையை அம்பாசிடர் கார் தற்போது பெற்றுள்ளது.

தொழிலதிபர் சி.கே. பிர்லாவுக்கு சொந்தமான இந்துஸ்தான் மோட்டார் நிறுவனம், 1948-ம் ஆண்டு மேற்கு வங்காள மாநிலம் ஹுப்ளி மாவட்டத்தில் அம்பாசிடர் கார்களை முதன்முதலாக தயாரித்தது.

1980-ம் ஆண்டு மலிவு விலையில் மாருதி கார்கள் தயாரிக்கப்பட்ட பிறகு மெல்ல, மெல்ல மவுசை இழந்த அம்பாசிடர் கார்கள் இந்திய சாலைகளில் காண்பதற்கு அரிய அரும்பொருளாக மாறி விட்டது.

மத்திய அரசு மற்றும் மாநில அரசு அலுவலகங்களில் ஆங்காங்கே ஒன்றிரண்டு அம்பாசிடர் கார்கள் வலம் வந்தாலும் 2012-13-ம் ஆண்டில் மொத்தம் 3 ஆயிரத்து 390 அம்பாசிடர் கார்கள் மட்டுமே விற்பனையானது.

இந்த நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரை வெறும் 709 கார்களே விற்பனையாகி உள்ளன.

இந்நிலையில், உலகின் தலைசிறந்த டாக்சியாக அம்பாசிடர் கார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை இந்தியருக்கு கிடைத்த கவுரவமாகவே கருத வேண்டும்.