Home 13வது பொதுத் தேர்தல் தேர்தல் மனு மீதான தீர்ப்பு: பத்து தொகுதியை திரும்பப் பெற்றார் தியான் சுவா! தித்திவாங்சா தொகுதியை...

தேர்தல் மனு மீதான தீர்ப்பு: பத்து தொகுதியை திரும்பப் பெற்றார் தியான் சுவா! தித்திவாங்சா தொகுதியை தக்க வைத்தது தே.மு!

537
0
SHARE
Ad

Tian Chuaகோலாலம்பூர், ஜூலை 24 – பத்து நாடாளுமன்ற தொகுதியில் முறையான வழியில் தான் பிகேஆர் உதவித் தலைவரான தியான் சுவா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று கோலாலம்பூர் தேர்தல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

பத்து தொகுதியின் தேர்தல் முடிவுக்கு எதிராக, கெரக்கான் இளைஞர் பிரிவுத் தலைமைச் செயலாளர் டாக்டர் டொமினிக் லாவ்  சமர்ப்பித்த தேர்தல் மனுவை நீதிபதி சபாரியா முகமட் யூசோப் தள்ளுபடி செய்ததோடு, மனு முழுமையாக இல்லை என்று அறிவித்துள்ளார்.

“முதல் பிரதிவாதியால் எழுப்பப்பட்ட தொடக்க ஆட்சேபனையை நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது” என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

தேர்தல் ஆணையத்தை பிரதிநிதித்த மூத்த கூட்டரசு வழக்கறிஞர் அமர்ஜித்  சிங்,  செலவுத் தொகையை தருமாறு தேசிய முன்னணிக்கு எதிராக கோரிக்கை விடவில்லை.

அதே நேரத்தில், தித்திவாங்சா நாடாளுமன்றத் தொகுதியில், தேசிய முன்னணி எழுப்பிய தொடக்க ஆட்சேபனையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதாகவும், எனவே அத்தொகுதியை தேசிய முன்னணி தக்கவைத்து கொள்ளும் என்றும் சபாரியா தீர்ப்பளித்தார்.

இந்த இழப்பை ஈடு செய்யும் வகையில், பாஸ் வேட்பாளருக்கு எதிராக 50,000 ரிங்கிட் செலவுத் தொகையை தரும்படி அந்த மூத்த கூட்டரசு வழக்கறிஞர் விண்ணப்பித்தார்.