இஸ்லாமாபாத், ஜூலை 24- பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை மனித வெடிகுண்டு மூலம் கொல்லும் சதி திட்டம் முறியடிக்கப்பட்டதாக பாகிஸ்தான் உளவுத்துறையினர் இன்று தெரிவித்தனர்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் யூசுப் ராஜா கிலானியின் மகன் ஹைதர் கிலானி கடந்த மே மாதம் மர்ம மனிதர்களால் கடத்தப்பட்டார்.
இதற்காக பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் முஷரப், முன்னாள் பிரதமர் சவுக்கத் அஜீஸ் ஆகியோர் மீது வெற்றிகரமாக தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய மடியுர் ரஹ்மான், முஹம்மது யாசீன் ஆகியோர் நியமிக்கப்பட்டதாக விசாரணையில் தெரிந்தது.
இவர்கள் இருவரையும் உயிருடனோ, பிணமாகவோ ஒப்படைப்பவர்களுக்கு ரூ.30 லட்சம் சன்மானம் வழங்குவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரதமரின் வீடு அமைந்துள்ள ரைவிண்ட் பகுதியில் உள்ள தப்லீகி ஜமாத் அலுவலக வளாகத்தில் தங்கியிருந்த தற்கொலை படையினர் செல்போன் பயன்பாட்டை குறைத்துக் கொண்டு பொது தொலைபேசி மூலமாகவே பிரதமரின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.
சுமார் ஒரு வார காலம் அங்கே தங்கியிருந்த அவர்கள் உளவுத்துறையினர் தேடும் தகவலை ரகசியமாக தெரிந்துகொண்டு அங்கிருந்து தப்பியோடி விட்டதாகவும் இதன்மூலம் பிரதமரை கொல்ல நடத்த முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் உளவுத்துறையினர் தெரிவித்ததாக பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் ‘எக்ஸ்பிரஸ் டிரிபியூன்’ பத்திரிகை இன்று செய்தி வெளியிட்டுள்ளது.