Home நாடு நிபந்தனையின்றி போக்குவரத்து செலவிற்கு பணம் கொடுப்பது லஞ்சம் ஆகாது – தேர்தல் ஆணையம்

நிபந்தனையின்றி போக்குவரத்து செலவிற்கு பணம் கொடுப்பது லஞ்சம் ஆகாது – தேர்தல் ஆணையம்

545
0
SHARE
Ad

ECகோலாலம்பூர், ஜூலை 27 – தேர்தல் நேரத்தில் எந்த ஒரு நிபந்தனையும் இன்றி போக்குவரத்து செலவிற்காக பணம் கொடுப்பது லஞ்சம் என்று கருதப்படாது என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

இது குறித்து தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் அஜீஸ் முகமட் யூசுப் கூறுகையில்,”பணம் கொடுப்பவர் குறிப்பிட்ட வேட்பாளருக்கு தான் வாக்களிக்க வேண்டும் என்று நிபந்தனையோடு பணம் கொடுத்தால் மட்டுமே அது சட்டத்தை மீறுவதாகும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கோல பெசுட் இடைதேர்தலில் கம்போங் பெரிஸ் லாம்பு கிராமத் தலைவர் யாகோப் காதிர், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தார் என்று கூறப்படுவது குறித்து கருத்துரைத்த அப்துல் அஜீஸ், “அவ்விவகாரம் குறித்து புகார் எதையும் தேர்தல் ஆணையம் பெறவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice