Home இந்தியா முன்னாள் மகாராஜாவின் 20,000 கோடி மதிப்புள்ள சொத்துகளை திரும்பப்பெற்ற வாரிசுகள்

முன்னாள் மகாராஜாவின் 20,000 கோடி மதிப்புள்ள சொத்துகளை திரும்பப்பெற்ற வாரிசுகள்

534
0
SHARE
Ad

சண்டிகர், ஜூலை 29- ஹரிந்தர்சிங் பிரார் என்பவர் பரித்கோட் பகுதியின் ராஜவம்சத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

இவர்களது பரம்பரைக்குச் சொந்தமான புதுடெல்லியில் கோபர்நிகஸ் மார்கில் உள்ள புகழ் வாய்ந்த அரண்மனை, பரித்கோட்டில் உள்ள அரண்மனை வளாகம், கோட்டை, சண்டிகரின் மனிமஜ்ரா பகுதியில் உள்ள கோட்டை, ரோல்ஸ் ராய்ஸ் உட்பட பழங்கால கார்கள், பரித்கோட்டில் 200 ஏக்கர் சுற்றளவில் உள்ள ஒரு விமானநிலையம், ஹைதராபாத், டெல்லி பகுதியில் உள்ள சொத்துகள், மும்பை ஸ்டாண்டர்ட் சார்ட்டட் வங்கியில் உள்ள 1000 கோடி மதிப்புள்ள தங்க,வெள்ளி பொருட்கள் மற்றும் பல சொத்துகள் வழக்கில் இருந்தன.

Sir-Harinder-Singh-Brar Maharaja_0_0_0இவர் மனநலம் சரியில்லாமல் இருந்தபோது, அவரது ஊழியர்களாலும்,அதிகாரிகளாலும் மன்னரின் உயில் திருத்தப் பட்டிருக்கின்றது. திருத்தப்பட்ட அந்த உயில் 1982-ம் ஆண்டு பதிவும் செய்யப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

திருத்தப்பட்ட உயிலின்படி,1989-ம் ஆண்டு மன்னர் இறந்தவுடன் அவரது சொத்துகள் அனைத்தும் மேஹர்வால் கேவாஜி டிரஸ்ட்டைச் சேர்ந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த டிரஸ்ட்டின் உறுப்பினர்களாக மன்னரிடம் பணிபுரிந்த சில முன்னாள் ஊழியர்கள் இருந்துள்ளனர்.

இந்த டிரஸ்ட்டின் தலைமைப் பதவியில் மன்னரின் ஒரு மகளான அம்ரித் கவுர் என்பவர் மாதம் 1,200ரூபாய் பெற்றுக்கொள்வார் என்றும், உதவித் தலைவராக மற்றொரு மகளான தீபிந்தர் கவுர் நியமிக்கப்பட்டு மாதம் 1000ரூபாயும் பெற்றுக்கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. மன்னரது மூன்றாவது மகள் 2001-ம் ஆண்டில் இறந்துவிட்டார்.

கடந்த 1992-ம் ஆண்டு, அம்ரித் கவுர் இந்த சொத்துகளின் மீது உரிமை கோரி நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தார். கடந்த 21 வருடங்களாக நடந்த இந்த வழக்கின் தீர்ப்பு, கடந்த வியாழக்கிழமை அன்று வெளிவந்தது. இந்த சொத்துகளின் மீது 32 வருடங்களுக்கு முன்னாள் எழுதப்பட்ட உயில் போலியானது, சட்ட விரோதமானது என்று சண்டிகரின் உயர் நீதிமன்றத்தின் நீதிபதி ரஜினிஷ்குமார் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

இதன்மூலம் தற்போது 20,000 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ள இந்த சொத்துகள், மன்னரின் இரண்டு மகள்களுக்குமே சேரும் என்பது உறுதியாகி உள்ளது.