ஜூலை 30- தமிழ், தெலுங்கு, பட உலகில் முன்னணி கதாநாயகியாக கலக்கியவர் த்ரிஷா.
அனுஷ்கா, ஹன்சிகா, காஜல் அகர்வால், அமலாபால், டாப்ஸி, சமந்தா போன்றோர் தமிழ், தெலுங்கு பட உலகை தங்கள் கைக்குள் கொண்டு வந்து விட்டனர்.
பெரிய கதாநாயகர்கள் இவர்களை தான் ஜோடியாக்குகிறார்கள். இதனால் உச்சத்தில் இருந்த த்ரிஷாவுக்கு இப்போது படங்கள் இல்லை.
ஜெயம் ரவியுடன் பூலோகம், ஜீவாவுடன் என்றென்றும் புன்னகை படங்களில் நடிக்க கடந்த வருடம் ஒப்பந்தம் ஆனார். இவற்றின் படப்பிடிப்பு முடிந்துள்ளது.
புதுப்பட வாய்ப்புகள் வரவில்லை. இரு பட உலகிலும் த்ரிஷாவை ஓரம் கட்டுவதாக கிசுகிசுக்கின்றனர். தனக்கு நெருக்கமான பழைய கதாநாயகர்கள் கூட கண்டு கொள்ளவில்லை.
இதனால் வருத்தத்தில் இருக்கிறார். திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கைக்கு மாறிவிடலாமா என யோசிக்கிறாராம்.