Home வாழ் நலம் சினம் தவிர்ப்போம் சினேகம் வளர்ப்போம்

சினம் தவிர்ப்போம் சினேகம் வளர்ப்போம்

628
0
SHARE
Ad

ஜூலை 30- பொதுவாக நாம் அறியாதவற்றை அறிந்து கொள்ள நேரிடும்போது, நம்மை நாமே மாற்றிக் கொள்கின்றோம். ஆனால் அதன் தீமைகளை நாம் அறிந்திருந்தும் இந்த பொல்லாக் கோபத்திருந்து விடுபட முடியாமல் தவிக்கின்றோம்.

calm-down-an-angry-person-400x265ஒரு நொடிக்கு குறைவான நேரத்திலேயே மனிதனை உருக்குலைத்து விடக் கூடிய கோபத்திற்கு `பொல்லாதது’ என்ற வார்த்தை பொருத்தமானது தான். கோபம் என்பது ஒரு எதிர்மறையான உணர்வு. இது உலகில் சொந்த வாழ்க்கையிலும், சமுதாயத்தின் பல பிரச்சனைகளிலும் பங்கு வகிக்கிறது.

இது சமுதாய சட்டங்களையும், நன்நடத்தையையும் மீறச் செய்கிறது, நாட்டுத் தலைவர்களின் தனி நபர் கோபம் பல உயிர்களை எடுக்கக்கூடிய போராக உருவெடுக்கிறது. ஆகையால் இதை கண்களை மறைக்கும் இருள் அல்லது அறியாமை என்றும் கூறுகிறார்கள். ஏனெனில் கோபம் வரும்போது நாம் என்ன பேசுகிறோம், என்ன செய்கிறோம் என்பதே தெரிவதில்லை.

#TamilSchoolmychoice

கோபக்காரன் வீட்டிலிருக்கும் பானைத் தண்ணீர் கூட வற்றி காய்ந்து விடும் என்பார்கள். கோபம் எவ்வாறு நம்மை பாதிக்கிறது?

உடல் ரீதியான பாதிப்புகள்:-

 தலைவலி, முடி உதிர்தல், தோல் வியாதிகள் களைப்பு மற்றும் தூக்கமின்மை எடைகூடும், எடை குறைவு, மலச்சிக்கல், மூட்டுவலி, தசைபிடிப்பு, வயிற்றுவலி, மார்புவலி, அதிகமாக வேர்த்தல்

மன ரீதியான பாதிப்புகள்:-

 வருத்தம், டென்ஷன், சிடுசிடுப்பு, கடுகடுப்பு, கவலை, உற்சாகமின்மை, தற்கொலை மனப்பான்மை. புத்தி சம்மந்தமான பாதிப்புகள்: ஞாபகமறதி, குழப்பம், பகுத்தறிவோ அல்லது சரியான முடிவு எடுக்க முடியாத நிலை.

சமுதாய பாதிப்புகள்:-

வன்முறைகள், சமூக விரோதச் செயல்கள் போர், தீவிரவாதம் சட்டவிரோதமான போராட்டங்கள்.

கோபத்தைக் கட்டுப்படுத்த ஒரு சில வழிகள் :-

Happy-people-by-Evil-Erinமுதலில் கோபத்தால் நன்மை விளையும் என்கிற எண்ணத்தை விலக்கிக் கொள்வது, கோபம் வரும்போது ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பது, 1,2,3 என எண்ணிக் கொண்டே அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்லுதல் பேனாவை எடுத்துக் கொண்டு உங்கள் மன உணர்வுகளை ஒரு காகிதத்தில் எழுதுதல் நகைச்சுவை உணர்வை வளர்த்துக் கொண்டு சிரித்து பிரச்சனைகளை இலேசாக்குதல் தன்னுடைய தவறுகளை ஏற்றுக்கொள்ளுதல் மற்றவர்கள் உணர்வுகளை அவர்கள் நிலையில் இருந்து புரிந்து கொள்ளுதல்.

காரணத்தை பேசாமல் நிவாரணத்தை யோசித்தல். காலை எழுந்தவுடன் தியானம் செய்தல், இரவு உறக்கத்தின் முன்பும் தியானித்தல்.

கோபத்தை நீக்கி அமைதியை நிரப்பும் தியானம் :-

yogaதியானத்தில் நேர்மறையான சிந்தனைகளினாலும் இறைவனை அன்புடன் நினைவு செய்வதாலும் மனதை சாந்தப்படுத்தலாம். மேலும் பிரச்சனைகளையும் அமைதியான முறையில் அணுகலாம். ஏனெனில், தியானம் செய்யும்போது அமைதியின் கடலான பரம்பொருளுடன் புத்தி மூலமாக தொடர்பு கொள்வதால் நமது உள் மனதில் அமைதி நிரம்பி, நாம் அமைதியின் சொரூபமாகிவிடுகிறோம்.