Home நாடு “இந்தியாவிற்கு திரும்பிச் செல்லுங்கள்… சீனாவிற்கு திரும்பிச் செல்லுங்கள்” – தலைமையாசிரியை ஆத்திரம்

“இந்தியாவிற்கு திரும்பிச் செல்லுங்கள்… சீனாவிற்கு திரும்பிச் செல்லுங்கள்” – தலைமையாசிரியை ஆத்திரம்

566
0
SHARE
Ad

A Prakash Raoபெட்டாலிங் ஜெயா, ஜூலை 30 – சுங்கை பூலோ எஸ்கே ஸ்ரீ பிரிஸ்டினா பள்ளியில் குளியலறையில் சிற்றுண்டி சாலை அமைத்த விவகாரம் அடங்குவதற்குள் அடுத்து ஒரு பள்ளியில் புதிய விவகாரம் ஒன்று முளைத்திருக்கிறது.

நேற்று ஷா ஆலமில் உள்ள இடைநிலைப் பள்ளி ஒன்றில் தலைமையாசிரியை இந்திய மற்றும் சீன மாணவர்களை நோக்கி, “Balik India dan China”, (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிப் போ) என்று கத்தியுள்ளார்.

ஷா ஆலம் ம.இ.கா பிரிவு துணைத்தலைவரான ஏ.பிரகாஷ் ராவ் (படம்) இந்த விவகாரத்தை ‘பீரீ மலேசியா டுடே’ இணைய செய்தித் தளத்திற்கு தெரிவித்து, தன்னிடம் நிறைய பெற்றோர்கள் புகார்கள் அளிப்பதாகக் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், இந்த விவகாரத்தை கல்வி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து பிரகாஷ் ராவ் கூறுகையில், “சத்தமிட்ட மாணவர்கள் அனைவரையும் (மலாய் மாணவர்கள் உட்பட) திட்டியுள்ளார். இருப்பினும் அவர் தனது கட்டுப்பாட்டை இழந்து இஸ்லாம் அல்லாத மாணவர்களை நோக்கி இந்தியாவிற்கு செல்லுங்கள், சீனாவிற்கு செல்லுங்கள் என்று கூறியுள்ளார்.

எனினும், அவர் மீது சுமத்தப்பட்டுள்ள அந்த குற்றச்சாட்டு உண்மையா இல்லையா என்பதை தாங்கள் விசாரித்து வருவதாகவும், கல்வித்துறை உடனடியாக இவ்விவகாரத்தில் தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும் என்றும் பிரகாஷ் ராவ் கூறியுள்ளார்.

“இந்த குற்றச்சாட்டு உண்மையாக இருக்கும் பட்சத்தில், மாணவர்களிடையே இனவாதத்தை ஏற்படுத்திய அந்த தலைமையாசிரியை மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என்றும் பிரகாஷ் ராவ் தெரிவித்துள்ளார்.

இவ்விவகாரம் குறித்து சரியான தீர்வு காண அந்த தலைமையாசிரியை, உள்ளூர் பிரமுகர்கள் மற்றும் பெற்றோர் ஆகியோருடன் கலந்தாலோசிக்க கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்வதாகவும் பிரகாஷ் ராவ் குறிப்பிட்டுள்ளார்.