Home நாடு மீண்டும் ஒரு பள்ளி சர்ச்சை! மீண்டும் அதே “பாலேக் சீனா, பாலேக் இந்தியா” வார்த்தை!

மீண்டும் ஒரு பள்ளி சர்ச்சை! மீண்டும் அதே “பாலேக் சீனா, பாலேக் இந்தியா” வார்த்தை!

637
0
SHARE
Ad

smk schoolசிலாங்கூர், செப் 26 – ஏற்கனவே எழுந்த பள்ளி விவகாரங்கள் இன்னும் ஒரு சுமூக முடிவுக்கு வராத நிலையில், மீண்டும் ஒரு பள்ளி விவகாரம் எழுந்துள்ளது.

சிலாங்கூர் செமிஞியில் உள்ள இடைநிலைப்பள்ளி ஒன்றில் உதவி தலைமையாசிரியர் ஒருவர் நாட்டுப்பாடலுக்கு மதிப்பளிக்க மறுத்த மாணவர்களை நோக்கி “இந்தியாவுக்கு திரும்பிச் செல்லங்கள்… சீனாவிற்கு திரும்பிச் செல்லுங்கள்” என்று கூறியுள்ளார்.

எஸ்எம்கே எங்கு உசேன் என்ற பெயரைக் கொண்ட அந்த பள்ளியின் உதவி தலைமையாசிரியர், கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி மாணவர்களை நோக்கி இவ்வாறு கூறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இவ்விவகாரம் குறித்து அப்பள்ளியின் தலைமையாசிரியர் விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

எனினும், அதற்குள் சீன மாணவர்கள் இவ்விவகாரம் குறித்து வலைத்தளங்களில் பரப்பி விட்டனர் என்றும் கூறப்படுகிறது.

கல்வி சம்பந்தப்பட்ட பயிற்சிக்காக வெளியூர் சென்றுள்ள அந்த உதவி தலைமையாசிரியர், திரும்பி வந்ததும் இது குறித்து விசாரணை செய்யப்படும் என்றும், அவர் தவறு செய்திருந்தால் மாணவர்கள் முன் மன்னிப்பு கேட்க வைக்கப்படும் என்றும் அப்பள்ளியின் தலைமையாசிரியர் கூறியுள்ளார் என்று பத்திரிக்கை செய்திகள் கூறுகின்றன.