Home Featured நாடு “வெறுப்பதை நிறுத்துங்கள் – அவர்கள் குழந்தைகள்” – சர்ச்சையில் சிக்கிய மாணவரின் தாய் கருத்து!

“வெறுப்பதை நிறுத்துங்கள் – அவர்கள் குழந்தைகள்” – சர்ச்சையில் சிக்கிய மாணவரின் தாய் கருத்து!

877
0
SHARE
Ad

Malaysia

கோலாலம்பூர் – “அவர்கள் குழந்தைகள். அவர்களை மற்றவர்கள் சூழ்ந்து கொண்டு ஊக்கப்படுத்தியது தான் இந்தச் சம்பவம் நடந்ததற்குக் காரணம்” என்று சர்ச்சையான அந்தக் காணொளியில் இருந்த மாணவரின் தாய் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தை ஊதிப் பெரிதுபடுத்திவிட வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

#TamilSchoolmychoice

பள்ளியில் நடைபெற்ற நடனத்திற்கு பயிற்சி பெறும் நோக்கில் தான் தனது மகன் அந்த மாணவியிடம் மண்டியிட்டு காதலை வெளிப்படுத்தும் படியாக நடந்து கொண்டார் என்றும் அந்தத் தாய் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் சிலர் இதை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு வேண்டுமென்றே அக்காணொளியை தவறான நோக்கில் நட்பு ஊடகங்களில் பரப்பிவிட்டுவிட்டனர் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆனால் அதனைப் புரிந்து கொள்ளாத சிலர் அந்தக் காணொளியை தங்கள் பேஸ்புக் பக்கங்களில் பகிர்ந்து கடுமையான முறையில் அம்மாணவர்களை விமர்சித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, அம்மாணவர்கள் யார் என்பதை அறிய கல்வியமைச்சு முயற்சி செய்து வருவதாக துணைக் கல்வியமைச்சர் கமலநாதன் தெரிவித்துள்ளார்.

படம்: மாதிரி பள்ளி