Home நாடு “இந்தியா,சீனாவிற்கு திரும்பிச் செல்லுங்கள் என்று சொன்னேன்” – தலைமையாசிரியை ஒப்புதல்!

“இந்தியா,சீனாவிற்கு திரும்பிச் செல்லுங்கள் என்று சொன்னேன்” – தலைமையாசிரியை ஒப்புதல்!

601
0
SHARE
Ad

A Prakash Raoஷா ஆலம், ஜூலை 31 – மாணவர்களை “இந்தியாவிற்கு செல்லுங்கள், சீனாவிற்கு செல்லுங்கள்” என்று தான் கூறியதை ஆலம் மேகா எஸ்எம்கே பள்ளியின் தலைமையாசிரியை ஒப்புக்கொண்டுள்ளார்.

இது குறித்து ஷா ஆலம் மஇகா பிரிவு துணைத்தலைவர் ஏ.பிரகாஷ் ராவ்(படம்) கூறுகையில், தனது பேச்சு குறித்து தலைமையாசிரியை மன்னிப்புக் கேட்பதாகவும், அவர் மலாய் மாணவர்களைப் பார்த்தும் கூட “இந்தோனேசியாவிற்கு திரும்பிச் செல்லுங்கள்” என்று கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

“வரும் வெள்ளியன்று மாணவர்கள் முன் தான் மன்னிப்பு கேட்கப் போவதாகவும் அவர் வாக்குறுதி அளித்துள்ளார்” என்று இன்று காலை அந்த பள்ளியைப் பார்வையிடச் சென்ற பிரகாஷ் ராவ் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மாணவர்கள் மிகவும் சத்தம் எழுப்பிக்கொண்டு இருந்ததால், தலைமையாசிரியை தனது கட்டுப்பாட்டை இழந்து அது போல் கத்தியதாகக் கூறப்படுகிறது.