Home நாடு நாய் பயிற்றுநரை துன்புறுத்துவதை நிறுத்துங்கள் – அம்பிகா கூறுகிறார்

நாய் பயிற்றுநரை துன்புறுத்துவதை நிறுத்துங்கள் – அம்பிகா கூறுகிறார்

550
0
SHARE
Ad

Untitled-1

கோலாலம்பூர், ஆகஸ்ட் 2 – நாய்களை வைத்து கொண்டு ஹரி ராயா வாழ்த்து தெரிவிப்பது போலான காணொளியை யூ டியூப் வலைத்தளத்தில் வெளியிட்ட நாய் பயிற்றுநரான மஸ்னா முகமட் யூசோப் (வயது 38) நேற்று காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

அவருக்கு அண்டை வீட்டாரிடமிருந்து பல்வேறு கொலை மிரட்டல்கள் வந்ததாகக் கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், இது குறித்து பெர்சே இயக்க இணைத்தலைவர் எஸ்.அம்பிகா ஸ்ரீனிவாசன்(படம் வலது) கூறுகையில், “மஸ்னாவின் பாதுகாப்பு குறித்து எனக்கு கவலையாக இருக்கிறது. அவருக்கு பல்வேறு கொலை மிரட்டல்கள் வருகின்றன. அவர் வெளியிட்டுள்ள காணொளியை ஏற்றுக்கொள்வதும், ஏற்றுக்கொள்ளாததும் அவரவர் தனிப்பட்ட விருப்பம்” என்று கூறியுள்ளார்.

மேலும், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்ட அந்த காணொளிக்கு, இப்போது காவல்துறை நடவடிக்கை எடுத்திருப்பது வியப்பாக இருக்கிறது என்றும், இந்த விவகாரத்தில் காவல்துறை காட்டிய வேகத்தையும், செயல்திறனையும் நாட்டில் நடக்கும் ஊழலுக்கும், அதிகார துஷ்பிரயோகங்களுக்கும் எதிராக ஏன் காட்டவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

முகைதீன் பொதுமக்களை தவறாக வழிநடத்துகிறார்Ambiga

இந்த காணொளியை வெளியிட்டது இஸ்லாம் அல்லாதவர்களின் வேலையாக இருக்கும் என்று துணைப்பிரதமர் முகைதீன் யாசின் கூறியுள்ளதை அம்பிகா சாடியுள்ளார். அதோடு துணைப்பிரதமரின் கருத்துக்கு அவரை தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் விசாரணை செய்ய வேண்டும் என்று சில வட்டாரங்கள் கூறுவதையும் அம்பிகா மறுத்துள்ளார்.

“நான் தேச நிந்தனைச் சட்டத்தை விரும்பாதவள். இந்த சட்டத்தை யாருக்கு எதிராகப் பயன்படுத்தவும் நான் பரிந்துரைக்க மாட்டேன்” என்று விளக்கமளித்துள்ளார்.

இருப்பினும், துணைப்பிரதமர் தனது கருத்தை திரும்பப் பெற்று மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அம்பிகா கூறியுள்ளார்.

“முகைதீன் தனது கருத்தை திரும்பப் பெறவோ அல்லது மன்னிப்போ கேட்கவேண்டும். இல்லை என்றால் இது மிகப் பிரச்சனையாகும்” என்று அம்பிகா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“ஒரு துணைப்பிரதமருக்கு, இது போன்ற கருத்துக்கள் மக்களை தவறான பாதையில் வழிநடத்தும் என்று தெரிந்திருக்க வேண்டும். வன்முறை, கொலை, இனவாதம் ஆகியவை தான் இந்த தேசத்தின் எதிர்காலமாக இருக்கக் கூடாது” என்றும் அம்பிகா தெரிவித்துள்ளார்.

நஜிப்பிடமிருந்து தலைமைத்துவம் இல்லை

போதுமான தலைமைத்துவம் இல்லாத காரணத்தால் தான், மே 5 பொதுத்தேர்தலுக்குப் பிறகு பிரதமர் நஜிப் துன் ரசாக் நீண்ட மௌனம் காத்து வருகிறார். வரும் கட்சி தேர்தலில் வெற்றியடைவது பற்றியே தற்போது அவர்கள் ஒவ்வொருவரும் சிந்தித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று அம்பிகா குற்றம் சாட்டியுள்ளார்.

“ஒரு சரியான தலைமைத்துவம் இல்லை என்றால் பிறகு எதற்காக அவர்கள் தேர்தலில் போட்டியிடுகிறார்கள்? அமைச்சரவையில் உள்ள அனைவரும் தங்களுக்கேற்றார் போல் கருத்தை வெளியிடுகிறார்கள் ஆனால் பிரதமர் எப்போதும் மௌனம் காத்து வருகிறார்” என்று அம்பிகா கூறியுள்ளார்.

மேலும், “ கட்சி தேர்தல் முடிந்தால் தான் தலைமைத்துவத்தை காட்ட முடியும் என்பது போல் அவர்கள் நடந்து கொள்வதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்றும் அம்பிகா தெரிவித்துள்ளார்.