Home இந்தியா தகவல் அறியும் உரிமை சட்டத்திலிருந்து அரசியல் கட்சிகளுக்கு விலக்கு: மத்திய அமைச்சரவை முடிவு

தகவல் அறியும் உரிமை சட்டத்திலிருந்து அரசியல் கட்சிகளுக்கு விலக்கு: மத்திய அமைச்சரவை முடிவு

533
0
SHARE
Ad

புதுடெல்லி, ஆக. 2- தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட் உட்பட ஆறு தேசிய கட்சிகள் தங்களுக்கு கிடைக்கும் நிதி வரும் வழி, வேட்பாளார்களை தேர்ந்தெடுக்கும் முறை ஆகியவற்றை ஆர்டிஐ என்னும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கட்சிகளிடம் கேட்டுப்பெறலாம் என சில மாதங்களுக்கு முன் தகவல் ஆணையம் அறிவித்தது.

cf8b7b27-3542-4e22-ade6-420e7074af25hiresஇதற்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில், டெல்லியில் இன்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில், இந்த பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தின் முடிவில், தகவல் அறிவும் உரிமைச்சட்டத்தை திருத்தவும், தகவல் அறியும் உரிமைச்சட்டத்திலிருந்து அரசியல் கட்சிகளுக்கு விலக்கு அளிக்க சட்டதிருத்தம் கொண்டுவரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

மேலும், சில்லறை வர்த்தகத்தில் நேரடி அந்நிய முதலீடு தொடர்பான விதிகளை தளர்த்த ஒப்புதல் அளித்துள்ளது. பல பொருள் சில்லறை வணிகத்திலும் எப்டிஐ விதிகளை தளர்த்த மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.