Home நாடு தர்மேந்திரன் கொலை வழக்கு உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம்!

தர்மேந்திரன் கொலை வழக்கு உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம்!

583
0
SHARE
Ad

dharma

கோலாலம்பூர், ஆகஸ்ட் 2 – தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட தர்மேந்திரன் மரணத்தில் தொடர்புடைய நான்கு காவல்துறை அதிகாரிகளின் தொடரப்பட்ட கொலை வழக்கு மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் இருந்து உயர்நீதிமன்றத்திற்கு செல்கிறது.

மாஜிஸ்ட்ரேட் நூர் அமினா மார்டியா முகமட் நூர் இவ்வழக்கை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றும் விண்ணப்பத்திற்கு அனுமதியளித்தார்.

#TamilSchoolmychoice

காவல்துறை அதிகாரிகளான ஹரே கிருஷ்ணா (வயது 40), ஜப்ரி ஜாப்பார் (வயது 44), முகம்மட் நஹார் அப்துல் ரஹ்மான் (வயது 45), முகம்மட் ஹஸ்வாதி ஜம்ரி ஷாரி (வயது  32) ஆகிய நால்வரும், ஜாலான் ஹாங் துவாவில் உள்ள கோலாலம்பூர் காவல்துறை ராணுவ தலைமையகத்தில், 7 வது மாடியில், கடந்த மே மாதம் 21 ஆம் தேதி, மதியம் 12.20 க்கும் 2.50 க்கும் இடையில் இக்குற்றத்தைப் புரிந்ததாகக் கூறப்படுகிறது.

குற்றவியல் சட்டம் 302 ஆவது பிரிவின் படி, இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படலாம்.