கோலாலம்பூர், ஆகஸ்ட் 2 – மலேசியாவிற்கும், சீனாவிற்கும் இடையிலான உறவு கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வலுவாக இருந்து வருவது போல் இனி வரும் காலங்களிலும் தொடர்ந்து இருக்கும் என்று தான் நம்புவதாக பிரதமர் நஜிப் துன் ரசாக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இன்று டிவிட்டர் வலைத்தளத்தில் நஜிப் வெளியிட்டுள்ள பதிவில், “மலேசியாவிற்கும், சீனாவிற்கும் இடையிலான இந்த 40 ஆண்டுகால உறவு, அடுத்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் என்று நான் நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யி, பிரதமர் நஜிப் துன் ரசாக்கை நேற்று புத்ரஜெயாவிலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பு மலேசியாவிற்கும், சீனாவிற்கும் இடையிலான உறவை, வணிக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் வலுப்படுத்தும் என்று கூறப்படுகிறது.