Home உலகம் இஸ்ரேலை வேரோடு வீழ்த்துவோம்: ஈரான் அதிபர் சூளுரை

இஸ்ரேலை வேரோடு வீழ்த்துவோம்: ஈரான் அதிபர் சூளுரை

518
0
SHARE
Ad

டெஹ்ரான், ஆக. 3- இஸ்ரேலை வேரோடு வீழ்த்தும் பெரும்புயல் உருவாகிக் கொண்டுள்ளது என ஈரான் அதிபர் அஹமதினெஜாத் (படம்) இன்று அறிவித்தார்.

AHMADINEJAD L GESTUREஈரான் புதிய அதிபர் பதவிக்கான தேர்தல் கடந்த ஜுன் மாதம் 14-ம் தேதி நடைபெற்றது.

இதில் ஹசன் ரவுகானி அமோக வெற்றி பெற்றார். வரும் ஞாயிற்றுக்கிழமை ஈரானின் புதிய அதிபராக அவர் பதவி ஏற்கிறார். இந்நிலையில், இன்று தலைநகர் டெஹ்ரானில் தனது ஆதரவாளர்கள் இடையே அதிபர் அஹமதினெஜாத் பேசியதாவது:-

#TamilSchoolmychoice

ஜியானிய அடிப்படை கொள்கைகளை வேரறுக்கக் கூடிய பெரும்புயல் வந்துக் கொண்டிருக்கிறது என ஆண்டவனை சாட்சியாக வைத்து உங்களுக்கு அறிவிக்கிறேன்.

இஸ்ரேலுக்கு இந்த பிராந்தியத்தில் இடமே இல்லை.

மத்திய கிழக்கு நாடுகளை பயமுறுத்தி பணிய வைக்க இஸ்ரேலும் மேற்கத்திய நாடுகளும் முயற்சித்து வருகின்றன.

சிரியா மற்றும் எகிப்தில் அரங்கேறி வரும் சம்பவங்களை பார்த்து அந்நாடுகள் மகிழ்ச்சி அடைகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.