Home கலை உலகம் சென்னை எக்ஸ்பிரஸ் படவிழா: ஷாருக்கான், தீபிகா படுகோனே இன்று சென்னை வருகை

சென்னை எக்ஸ்பிரஸ் படவிழா: ஷாருக்கான், தீபிகா படுகோனே இன்று சென்னை வருகை

626
0
SHARE
Ad

சென்னை, ஆக. 3– ஷாருக்கானும், தீபிகா படுகோனேயும் இன்று சென்னை வருகிறார்கள். மாலையில் கிண்டியில் உள்ள நட்சத்திர தங்கும் விடுதியில் சென்னை எக்ஸ்பிரஸ் பட விழாவும், ஆடை அலங்கார அணி வகுப்பு நிகழ்ச்சியும் நடக்கிறது. இதில் அவர்கள் பங்கேற்கின்றனர்.

chennai_350__061713055506சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஷாருக்கானும், தீபிகாபடுகோனேவும் ஜோடியாக நடித்துள்ளனர். சத்யராஜ், மனோரமா, பிரியாமணி ஆகியோரும் நடித்துள்ளார்கள்.

மும்பையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் ரெயிலில் பயணம் செய்யும் ஷாருக்கான் தமிழகத்தை சேர்ந்த தாதாவின் மகள் மேல் காதல் வயப்படுகிறார். இதனால் ஏற்படும் விளைவுகளே கதை. தீபிகா படுகோனே தமிழ் பெண்ணாக நடிக்கிறார். வருகிற 8–ந்தேதி இப்படம் வெளியீடு காண்கிறது.

#TamilSchoolmychoice

சென்னையில் இன்று நடக்கும் விழாவில் ஷாருக்கான் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் நடித்த அனுபவங்கள் பற்றி பேசுகிறார். ஆடை அலங்கார அணி வகுப்பில் வெல்லும் பெண்ணுக்கு கிரீடமும் சூட்டுகிறார்.

chennai express

 

சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தின்  முன்னோட்டம்