Home அரசியல் அன்வார் வெளிநாட்டு வங்கிகளில் மில்லியன் கணக்கில் ரிங்கிட் வைத்துள்ளதாக பெர்மாத்தாங் பாவில் மர்ம கடிதங்கள்

அன்வார் வெளிநாட்டு வங்கிகளில் மில்லியன் கணக்கில் ரிங்கிட் வைத்துள்ளதாக பெர்மாத்தாங் பாவில் மர்ம கடிதங்கள்

587
0
SHARE
Ad

anwar-karpalகோலாலம்பூர், ஆகஸ்ட் 3 – எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் வெளிநாட்டு வங்கிகளில் மில்லியன் கணக்கில் ரிங்கிட் வைத்துள்ளதாக கூறும் கடிதங்கள் அவரின் சொந்தத் தொகுதியான பெர்மாத்தாங் பாவில் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

ஆயிரக்கணக்கான கடிதங்களின் பிரதிகளில் அன்வாரின் வங்கிக் கணக்குகள் எண்கள் குறிப்பிடப்பட்டு  பெர்மாத்தாங் பகுதியில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், அக்கடிதங்கள் 8 பிரதிகளைக் கொண்டது என்றும் உத்துசான் மலேசியா இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், ஜசெக தலைவர் கர்பால் சிங்கிற்கும், அன்வாருக்கும் இடையிலான வணிகம் தொடர்பான பேரத்தை வெளிக்கொண்டுவருதல் (Bankleaks Anwar/Karpal) என்று அக்கடிதத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இது குறித்து பெர்மாத்தாங் பாவ் தொகுதி முன்னாள் தேசிய முன்னணி வேட்பாளரான மஸ்லான் இஸ்மாயில் கூறுகையில், அக்கடிதம் தொடர்பாக தனக்கு கிட்டத்தட்ட 6000 பேரிடமிருந்து தகவல் கிடைத்துள்ளதாகவும், இந்த இரு எதிர்கட்சித் தலைவர்களும் இது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக மஸ்லான் கேட்டுக்கொண்டுள்ளார்.

இக்கடிதத்தை எழுதியவர் கர்பால் சிங்கின் முன்னாள் ஊழியர் ஒருவர் என்று உத்துசான் மலேசியா குறிப்பிட்டுள்ளது. ஆனால் அவரது பெயரை குறிப்பிடவில்லை.