Home இந்தியா மந்திரி பதவியை ராஜினாமா செய்ய சிரஞ்சீவி மறுப்பு

மந்திரி பதவியை ராஜினாமா செய்ய சிரஞ்சீவி மறுப்பு

510
0
SHARE
Ad

நகரி, ஆக 3– தனி தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதி காங்கிரஸ் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பலர் தங்கள் பதவியை ராஜினாமா செய்து உள்ளனர்.

மேலும் சில மந்திரிகளும் ராஜினாமா கடிதம் கொடுத்தனர். நடிகர் சிரஞ்சீவியிடம் மத்திய சுற்றுலா துறை மந்திரி பதவியை ராஜினாமா செய்வார் என கூறப்பபட்டது.

chiru-630-jpg_131850ஆனால் மந்திரி பதவியில் இருந்து விலக மாட்டேன் என்று சிரஞ்சீவி அறிவித்து உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:–

#TamilSchoolmychoice

எனது ஆதரவு ஐக்கிய ஆந்திராவுக்குதான் அதே நேரத்தில் கட்சி தலைமைக்கு கட்டுபட வேண்டியவனாக உள்ளேன்.

தனி தெலுங்கானா அமைய எல்லா கட்சிகளும் ஆதரவு தெரிவித்து இருந்தது. பெரும்பான்மை கட்சிகளின் கருத்துபடி மத்திய அரசு இந்தமுடிவை எடுத்துள்ளது. இதில் ஐதராபாத் தெலுங்கானாவுக்கு கொடுப்பது தான் வருத்தமாக உள்ளது. இதைத்தான் அவர் எதிர்க்கிறார்கள்.

இதற்கு ஒரே தீர்வு ஐதராபாத்தை தனி யூனியன் பிரதேசமாக மாற்ற வேண்டும். இதன் மூலம் அனைத்து தரப்பு மக்களும் பயமின்றி அதனை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

தனி தெலுங்கானாவிற்காக நான் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன். பதவி இருந்தால்தான் நமது உரிமைக்காக போராட முடியும். எனவே பதவியில் இருந்து மக்களின் உரிமைக்காக போராடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.