Home அரசியல் அம்னோ கட்சித் தேர்தல் – உதவித் தலைவர் பதவியைத் தக்கவைக்க ஹிஷாமுடின் போட்டியிட முடிவு

அம்னோ கட்சித் தேர்தல் – உதவித் தலைவர் பதவியைத் தக்கவைக்க ஹிஷாமுடின் போட்டியிட முடிவு

547
0
SHARE
Ad

PTJ01_160605_HISHAMUDDINகோலாலம்பூர், ஜூலை 3 – எதிர்வரும் அம்னோ கட்சித் தேர்தலில் தனது உதவித் தலைவர் பதவியை தக்க வைத்துக்கொள்ளப் போவதாக அம்னோ உதவித் தலைவர் ஹிஷாமுடின் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

தற்போது தான் பிரதிநிதித்து வரும் செம்புரோங் தொகுதி அடித்தட்டு உறுப்பினர்கள் முன்னிலையில் விரைவில் அவர் தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என்றும் இன்று சினார் ஹரியான் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

அம்னோ உச்ச மன்ற தேர்தல் இவ்வாண்டு டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.