Home நாடு “உங்களது வேலையை மட்டும் பாருங்கள்” – சிங்கப்பூர் நாளேடுக்கு காவல்துறைத் தலைவர் பதிலடி

“உங்களது வேலையை மட்டும் பாருங்கள்” – சிங்கப்பூர் நாளேடுக்கு காவல்துறைத் தலைவர் பதிலடி

579
0
SHARE
Ad

Khalid Abu Bakarகோலாலம்பூர், ஜூலை 3 – மலேசியாவில் சமீபகாலமாக அதிகரித்துள்ள குற்றச்செயல்கள் குறித்து சிங்கப்பூர் நாளிதழான ‘தி நியூ பேப்பர்’ வெளியிட்டிருந்த செய்திக்கு தேசிய காவல்துறைத் தலைவர் காலிட் அபு பக்கர் பதிலடி கொடுக்கும் விதமாக அறிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து காலிட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “இது ஒரு அவதூறான அறிக்கை. அவர்கள் அடுத்தவர்களை குறை சொல்வதை விட தங்களது நாட்டில் நடக்கும் குற்றச்செயல்களை பார்ப்பதே சிறந்து” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த ஜூலை 31 ஆம் தேதி வெளிவந்த  தி நியூ பேப்பரில், “மலேசியாவிற்கு வாருங்கள் … அங்கு மரணம் மலிவானது மற்றும் உயிரோடு வாழ்வது விலை உயர்ந்தது” என்ற தலைப்பில் கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது.

#TamilSchoolmychoice

அத்துடன், வெறும் 2000 டாலருக்கு (5000 ரிங்கிட்டுக்கு) கொலை செய்வதற்கு ஆட்கள் கிடைப்பார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது. இந்த கட்டுரை பல்வேறு பிரிவினரிடையே கடும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது. சம்பந்தப்பட்ட பத்திரிகை தனது கருத்து குறித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.