கோலாலம்பூர், ஆகஸ்ட் 5 – செர்டாங் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வரும் குற்றத் தடுப்பு ஆர்வலர் சஞ்சீவனிடம் விசாரணை நடத்த அவருக்கும் மீண்டும் சுயநினைவு திரும்புவதற்காக காவல்துறையினர் காத்திருக்கின்றனர்.
குற்றப்புலனாய்வுத் துறை தலைவர் ஹாடி ஹோ அப்துல்லா இது குறித்து கூறுகையில், சஞ்சீவன் சுடப்பட்ட அன்று அவருடன் காரில் சென்ற அவரது நண்பரிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
“நாங்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் மற்றும் அதன் மூலம் எங்களுக்கு சில தகவல்களும் கிடைத்துள்ளன. இருப்பினும், சஞ்சீவனிடம் விசாரணை நடத்துவது தான் மிகவும் முக்கியம். விரைவில் மருத்துவமனையின் அனுமதியோடு சஞ்சீவனிடம் பேசுவோம்” என்று ஹாடி ஹோ தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம் 27 ஆம் தேதி, நெகிரி செம்பிலானில் உள்ள பாகாவ் சாலை சந்திப்பில், மோட்டாரில் வந்த இருவர் சஞ்சீவனை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அதில் அவரது விலாவில் தோட்டாக்கள் பாய்ந்தது. இருப்பினும் சஞ்சீவன் மருத்துவ சிகிச்சையால் உயிர் பிழைத்துள்ளார்.