துனிஷ், ஆக .6– துனிசியாவில் கடந்த பிப்ரவரி மாதம் எதிர்க்கட்சி தலைவர் சோக்ரி பிலெய்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவரை தொடர்ந்து கடந்த மாதம் 25–ந்தேதி அதே கட்சியை சேர்ந்த எம்.பி. முகமது பிராமியும் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
இவர்களை மதவாதிகள் சுட்டுக் கொன்றதாகவும், அவர்களை கைது செய்ய அரசு தவறிவிட்டது என குற்றம்சாட்டியும் துனிசியாவில் போராட்டம் வெடித்தது.
தலைநகர் துனிஷ் வீதிகளில் திரண்டு பொது மக்கள் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்கள். தற்போதுள்ள எனாக்தா கட்சியின் அரசு பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினர்.
இவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளும் எனாக்தா கட்சி தொண்டர்களும் போராட்டத்தில் குதித்தனர்.
சுமார் 2 லட்சம் பேர் குடும்பத்துடன் துனிஷ் நகரில் உள்ள கஷ்பாக் சதுக்கத்தில் கொடியுடன் திரண்டு போராட்டம் நடத்தினர்.
அப்போது அரசுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.