Home நாடு ஸ்கார்ப்பின் நீர்மூழ்கிக் கப்பல் விவகாரம்: பிரான்ஸூக்குள் நுழைந்த மூவர் பற்றியும் புலனாய்வுத்துறை விசாரணை செய்கிறது

ஸ்கார்ப்பின் நீர்மூழ்கிக் கப்பல் விவகாரம்: பிரான்ஸூக்குள் நுழைந்த மூவர் பற்றியும் புலனாய்வுத்துறை விசாரணை செய்கிறது

577
0
SHARE
Ad

scorpene-300x183கோலாலம்பூர், ஆகஸ்ட் 6 – ‘டிசிஎன்எஸ்’ என்று அழைக்கப்படும் பாரீஸை அடிப்படையாகக் கொண்ட கப்பல் கட்டும் நிறுவனம், மலேசிய அரசாங்கத்திற்கு விற்பனை செய்த இரண்டு ஸ்கார்ப்பின்  நீர்மூழ்கிக் கப்பல் பேரத்தில், முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறப்படுவதை விசாரணை செய்யும் பிரஞ்சு நீதிபதிகள், கடந்த 1999 ம் ஆண்டு தொடக்கத்தில் மூன்று தனிநபர்கள் பிரான்ஸ் நாட்டிற்குள் நுழைந்தது குறித்தும் விசாரணை நடத்துவதாக கூறப்படுகிறது.

நஜிப் அப்துல் ரசாக், அப்துல் ரசாக் பகிந்தா, அல்தான்துயா ஷாரிபு ஆகிய மூவரும் பிரான்ஸ் நாட்டிற்குள் நுழைந்ததாகவும், ஆனால் அவர்கள்  பிரான்ஸுக்குள் நுழைந்ததற்கும், அங்கிருந்து வெளியேறியதற்கும் குடிநுழைவு ஆவணங்களில் எந்த பதிவும்  செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

மேலும், ஜாஸ்பிர் சிங் சால் என்ற முன்னாள் தரகர் இது குறித்து கூறுகையில், அல்தான்துயா பிரான்ஸூக்குள் நுழையவில்லை என்றும், இந்த பேரத்தில் அவருக்கு தொடர்பு இல்லையென்றும் பிரான்ஸ் ஆவணங்கள் காட்டுவதாகக் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

அதோடு, இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பிரஞ்சு நீதிமன்றத்தின் 54 வது ஆவணத்தில், எல்லை கடப்பு ஆவணங்களில் அவர்கள் மூவருடைய பெயர்களும் எழுதப்பட்டுள்ளதா என்பதையும், அவர்கள் 1999 ஆம் ஆண்டு பிரஞ்சு பிரதேசம் வழியாகக் கடந்து சென்றார்களா என்பதையும் ஸ்கார்ப்பின் நீர்மூழ்கிக் கப்பல் விவகாரத்தை விசாரணை செய்யும் நீதிபதிகள் அறிய விரும்புகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து எல்லைப் பாதுகாப்புப் படை இயக்குநரகத்திற்கு (Staff of the Central Directorate of the Frontier Police) தொலை நகல் வழி (via a fax) மூலமும் நீதிமன்றம் கேள்வி அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.

தேசிய எல்லைப் பாதுகாப்புப் படை ஆவணங்களிலும், பல்வேறு குறிப்புகளிலும் அவர்கள் மூவரின் பெயர்கள் இல்லை என்று கடந்த 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி நீதிமன்றத்திற்கு ஆவணங்கள் அனுப்பப்பட்டன. இருப்பினும், எல்லை கடப்பவர்களை பதிவு செய்யும் அந்த கோப்புகளில் அந்தான்துயா போன்று சந்தேகத்திற்குரிய சில பெயர்களும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆவணங்கள் 54 ன் படி, “ஷாரிபு பாயாஸ்காலான் என்ற நபர் 1979 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி, மங்கோலியாவில் பிறந்தவர் என்றும், அவருக்கு பிரஞ்சு பிரதேசத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் 26 ஆம் தேதி வரை தற்காலிக குடிநுழைவு அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த கடவுசிச்சீட்டின் விவரங்களை வைத்து பார்க்கும் போது, அல்தான்துயாவும் 1979 ஆம் ஆண்டும் மே 6 ஆம் தேதி பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2002 ஆம் ஆண்டு ஸ்கார்ப்பின் நீர்மூழ்கிக் கப்பல் பேரம் நடக்கும் போது, நஜிப் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும், துணைப்பிரதமராகவும் இருந்தார்.