டோக்கியோ, ஆக.6- கடந்த 1945ம் ஆண்டு நடந்த இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானின் ஹிரோஷிமா, நாகாசாகி ஆகிய நகரங்களின் மீது அடுத்தடுத்து அணு குண்டுகள் வீசப்பட்டன.
இந்த குண்டு வீச்சின் போது பாதிக்கப்பட்ட சுமார் 2 லட்சம் ஜப்பானியர்கள் இன்று காலை ஹிரோஷிமா நகரில் கூடி அணு குண்டு வீச்சில் பலியான மக்களின் ஆன்மா சாந்தியடைய ஊதுபத்திகளை ஏற்றி பிராத்தனை செய்தனர்.
இந்த பிராத்தனையில் பங்கேற்ற ஹிரோஷிமா நகர மேயர் கசுமி மட்சுயி, ‘அணு குண்டு என்பது மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்ட கெடுதலான ஆயுதம்.
இதன் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்கள் இந்த தீமையை எதிர்த்து தொடர்ந்து போராடி வருகிறார்கள்.
அணு தொழில்நுட்பத்தை மற்ற நாடுகளுக்கு வழங்குவதையும் முற்றிலுமாக கைவிட வேண்டும்’ என்றார்.