ஆக. 7- இயக்குனர் சேரனின் மகள் தாமினி, தனது காதலனுடன் தன்னை சேர்த்து வைக்க வேண்டும் என்று கூறி போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். அதேசமயம் தன் மகளை தன்னுடன் அனுப்ப வேண்டும் என்று சேரன் மன்றாடி வருகிறார்.
இருப்பினும் இந்த வழக்கின் முக்கியத்துவத்தை நீதிமன்றம் உன்னிப்பாக ஆராய்ந்து வருகிறது. தாமினி மேஜர் என்பதால் அவரை காப்பகத்தில் இருந்து அழைத்து வந்து, மூத்த வழக்கறிஞர் பிரசாத்தின் வீட்டில் தங்க வைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
இன்று மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தாமினி தனது பள்ளி தாளாளர் வீட்டில் தங்குவதற்கு விருப்பம் தெரிவித்தார்.
அதனை இரு தரப்பும் ஏற்றுக்கொண்டதையடுத்து, தாளாளர் வீட்டில் தங்க உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது.
மேலும் வழக்கு விசாரணை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.