Home 13வது பொதுத் தேர்தல் தேர்தலில் பிரதமரை எதிர்க்கிறது மாணவர் அமைப்பு!

தேர்தலில் பிரதமரை எதிர்க்கிறது மாணவர் அமைப்பு!

727
0
SHARE
Ad

sprபிப்.7- எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை அவரது பெக்கான் தொகுதியில் எதிர்த்துப் போட்டியிடுவதற்கு வேட்பாளர் ஒருவரை முன்மொழியப் போவதாக மாணவர் அமைப்பு ஒன்று அறிவித்துள்ளது.

நஜிப் நிர்வாகத்தை நிராகரிப்பதாகவும், பல்கலைக்கழக மாணவர்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்துவதற்காகவும் தான் தேர்தலில் களம் இறங்குவதாக கெராக்கான் மஹா சிஸ்வா பி.ஆர்.யு 13 “Gerakan Mahasiswa PRU13″ என அழைக்கப்படும் அந்த அமைப்பு இன்று நிருபர்களிடம் தெரிவித்தது.

13வது பொதுத் தேர்தலுக்கான தேதியை நஜிப் அறிவித்ததும் தேர்வு செய்யப்பட்ட தனது வேட்பாளர் பெயரை அந்த அமைப்பு வெளியிடும் என அதன் தலைவர் சிஸ் அப்துல் காதிர் சொன்னார்.

#TamilSchoolmychoice

தங்களுக்கு இடையில் உள்ள சாத்தியமான பல வேட்பாளர்களிலிருந்து அந்த வேட்பாளர் தெரிவு செய்யப்படுவார் என்றும் அவர் குறிப்பிட்டார்.