Home வணிகம்/தொழில் நுட்பம் அடுத்த கட்ட புதிய ஐ-போன் செப்டம்பர்-10இல் வெளியீடு?

அடுத்த கட்ட புதிய ஐ-போன் செப்டம்பர்-10இல் வெளியீடு?

735
0
SHARE
Ad

iphone12n-2-webஆகஸ்ட் 12 – கைத்தொலைபேசி தொழில் நுட்ப உலகம் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் புதிய தலைமுறை ஐ-போன் எதிர்வரும் செப்டம்பர் 10ஆம் நாள் அறிமுகப்படுத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

#TamilSchoolmychoice

ஐ-போன் 5c அல்லது ஐ-போன் 6 என ஆப்பிள் நிறுவனத்தின் இந்த புதிய ரக கைத்தொலைபேசிகள் அழைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புதிய ஐ-போன், இரண்டு ரகங்களாக வெளியிடப்படும் எனத் தெரிகின்றது. மலிவு விலை பதிப்பாக குறைந்த விலையில் ஒரு ரகமும், எல்லா நவீன தொழில்நுட்ப அம்சங்களையும் உள்ளடக்கிய முழுமையான கைத்தொலைபேசி ரகமாக அதிக விலையில் மற்றொன்றுமாக ஐ-போன்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஐ-போன் 5c” என்ற முத்திரையிடப்பட்ட நெகிழி (பிளாஸ்டிக்) பெட்டிகளின் படங்கள் தகவல் ஊடகங்களில் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து புதிய ரக ஐ-போன்களின் பெயர் “5C” என இருக்கலாம் என கணிக்கப்படுகின்றது.

ஆப்பிள் நிறுவனம் ஆகக் கடைசியாக வெளியிட்ட மென்பொருளான “ஐஓஎஸ்7 (iOS 7) என்ற மென்பொருளின் உள்ளடக்கத்தையே புதிய ரக ஐபோன்கள் கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய கருவிகள் எதிர்வரும் செப்டம்பரில் வெளியிடப்படலாம் என்ற சாத்தியத்தை அந்த நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டிம் குக் ஏற்கனவே கோடி காட்டி அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய ரக ஐ-போன்களும் மற்ற ஆப்பிள் நிறுவனக் கைத்தொலைபேசிகளைப் போலவே, மிகுந்த வரவேற்பைப் பெறும் என்றும் உலகம் முழுமையிலும் கோடிக்கணக்கில் விற்பனையாகும் என்றும் அதன் மூலம் ஆப்பிள் நிறுவனத்தின் பங்குச் சந்தை மதிப்பு மேலும் பன்மடங்காக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.