Home நாடு “அம்னோவுக்கு எதிராக மாறவில்லை – என் இறுதிமூச்சு வரை நான் அம்னோவைச் சேர்ந்தவன்” – அப்துல்லா...

“அம்னோவுக்கு எதிராக மாறவில்லை – என் இறுதிமூச்சு வரை நான் அம்னோவைச் சேர்ந்தவன்” – அப்துல்லா படாவி உருக்கம்

609
0
SHARE
Ad

pak-lah1கோலாலம்பூர், ஆகஸ்ட் 12 –   ‘அவேக்கினிங் தி அப்துல்லா இயர்ஸ் இன் மலேசியா’ என்ற நூலின் வழி அம்னோவை குறை கூறியதால், தான் அம்னோவிற்கு எதிராகிவிட்டதாகக் கூறப்படுவதை முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமட் படாவி மறுத்துள்ளார்.

அந்த நூல் உருவாவதற்காக அந்த பதிப்பாளர்களுக்கு அளித்த நேர்காணலில், கடந்த 2003 ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை தான் பதவி வகித்த காலத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.

மேலும், அப்துல்லா படாவி எதிர்கட்சிகளுடன் சேர்ந்து கொண்டு தனது சொந்த கட்சிக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டுள்ளார் என்று கூறப்படும் அவதூறுகளை நம்பவேண்டாம் என்று படாவி இன்று அறிக்கை விடுத்துள்ளார்.

#TamilSchoolmychoice

“அம்னோவை விமர்சித்து எனது நேர்காணலில் கருத்து கூறியதற்கு காரணம் அம்னோ தொடர்ந்து மக்களிடமிருந்து ஆதரவையும், நம்பிக்கையையும் பெற வேண்டும் என்று தான். நான் அம்னோவை விட்டு தனியாகப் பிரிந்து செல்லவில்லை. என் இறுதி மூச்சு உள்ளவரை நான் அம்னோவின் உறுப்பினர் தான்” என்று படாவி உருக்கமாகக் கூறியுள்ளார்.

இந்த நூல் வெளியீட்டால் பல்வேறு தரப்புகளிலிருந்து விமர்சனங்கள் எழும் என்பது தான் எதிர்பார்த்த ஒன்று தான் என்றும், ஆனால் அதன் முடிவுகளை மக்கள் தாங்களே வரையறுத்துக்கொள்ள வேண்டும் என்றும் படாவி கூறியுள்ளார்.