Home இந்தியா விஜயகாந்த் மீது அவதூறு வழக்கு

விஜயகாந்த் மீது அவதூறு வழக்கு

719
0
SHARE
Ad

vijaykanthசென்னை, பிப்.7- கமல் நடித்துள்ள, விஸ்வரூபம் படப் பிரச்னை தொடர்பாக, வெளியிடப்பட்ட அறிக்கையைத் தொடர்ந்து, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மீது, சென்னை, முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில், அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

விஸ்வரூபம் படம், சர்ச்சைக்கு உள்ளானது. படம் வெளியாவதில், முட்டுக்கட்டை ஏற்பட்டது.

இந்தப் பிரச்னை தொடர்பாக, தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா… சர்வாதிகார ஆட்சியா… என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், அறிக்கை வெளியிட்டார்.

#TamilSchoolmychoice

இந்த அறிக்கை, ஒரு பத்திரிகையில் வெளிவந்தது.இதையடுத்து, விஜயகாந்த்க்கு எதிராக, தமிழக முதல்வர் சார்பில், சென்னை, முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில்,நகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஜெகன், அவதூறு வழக்கை தாக்கல்செய்தார்.

அதில், விஜயகாந்தின் அறிக்கை, முதல்வரை அவதூறு செய்வதாக உள்ளது. முதல்வரின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

வேண்டுமென்றே, இவ்வாறு அறிக்கை வெளியிட் டுள்ளார். இதில், எந்த அடிப்படையும் இல்லை.எனவே, விஜயகாந்த் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் ஒரு வழக்கு: சிவகங்கையில், 2012 ஆக.,8 ல் தே.மு.தி.க., பொதுக்கூட்டம் நடந்தது. இதில், பங்கேற்ற விஜயகாந்த், முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக, பிப்.,2ல் சிவகங்கை செஷன்ஸ் கோர்ட்டில், மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை, நீதிபதி மாயாண்டி,நேற்று விசாரித்து தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், மார்ச் 6ல் கோர்ட்டில் ஆஜராக உத்தரவிட்டார்.