Home நாடு தமிழ்ப்பள்ளிகளின் கட்டுமான குத்தகைகள் இந்தியர்களுக்கே! – கமலநாதன் அறிவிப்பு

தமிழ்ப்பள்ளிகளின் கட்டுமான குத்தகைகள் இந்தியர்களுக்கே! – கமலநாதன் அறிவிப்பு

603
0
SHARE
Ad

புத்ரஜெயா, ஆக.14- ம.இ.கா தேசிய தலைவர் டத்தோஸ்ரீ ஜி. பழனிவேல் மற்றும் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ  டாக்டர் எஸ்.சுப்ரமணியம்  அவர்களின் முயற்சியின் பலனாக, தமிழ்ப் பள்ளிகள் கட்டுவதற்கான குத்தகை வாய்ப்பு இந்தியர்களுக்கு வழங்கப்பட்டது.

அவ்வகையில் தமிழ்ப்பள்ளிகளின் கட்டுமான குத்தகைகள் தொடர்ந்து இந்தியர்களுக்கு வழங்கப்படுவதோடு, அந்நடவடிக்கை துரிதமாக மேற்கொள்ளப்படுமென கல்வித் துறை துணையமைச்சர் பி.கமலநாதன் தெரிவித்தார்.

kamalanathanஇந்த ஆண்டு முதல் கட்டமாக மொத்தம் 53 இந்திய  குத்தகையாளர்கள் தமிழ்பள்ளி கட்டுமான திட்டத்திற்காக விண்ணப்பித்திருந்தனர்.

#TamilSchoolmychoice

இதில் தகுதி பெற்றுள்ள 39 இந்திய குத்தகையாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதேசமயம் இந்த 39 குத்தகையாளர்களில் யாரேனும் பின்வாங்கிக் கொண்டால், மீதமுள்ள 14 குத்தகையாளர்கள் அவ்விடம் நிரப்புவர் என்று கமலநாதன் கூறினார்.

இதனை தொடர்ந்து, குத்தகையாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்ட அடுத்த கட்டமாக,  நிதியமைச்சு குத்தகையாளர்களிடம் நேரடி கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளும்.

எனவே, குத்தகையாளர்களின்  குத்தகை வாய்ப்பு உறுதி கடிதம் வழங்க தாமதமாகும் பட்சத்தில், நிதியமைச்சு விரைவாக செயல்பட தகுந்த நடவடிக்கையை கல்வி அமைச்சு முன்னெடுக்கும் என்று உறுதியாக கமலநாதன் கூறினார்.