கோலாலம்பூர், ஆகஸ்ட்21 – நாய் பயிற்றுனர் மஸ்னா தனது நாய்களை வைத்து ராயா வாழ்த்து சொன்னது, ஜோகூர் சூராவில் பௌத்தர்கள் வழிபாடு செய்தது என இஸ்லாம் மத சம்பந்தமான சர்ச்சைகள் சமீபகாலமாக மலேசியாவில் அதிகமாகக் காணப்படுவது மலேசியா இஸ்லாம் பழமைவாதம் நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது என்ற கருத்தை பிரதமர் நஜிப் மறுத்துள்ளார்.
புத்ராஜெயாவில் இன்று பிரதமர் துறையின் நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் கலந்த கொண்ட நஜிப் செய்தியாளர்களைச் சந்தித்த போது, “மலேசியா பழமைவாதம் நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது என்ற கேள்விக்கே இடமில்லை. மலேசிய மக்களின் உணர்வுகள் வெளிப்படுகின்றன. அவை இஸ்லாமுக்கு மட்டும் உரியது இல்லை. இஸ்லாம் அல்லாதோரும் அதே போன்ற உணர்வுகளைக் கொண்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “அனைத்து மதத்தினரின் உணர்வுகளையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.