Home நாடு குண்டர் கும்பல்களில் ஈடுபடுவோரில் 71 சதவீதம் இந்தியர்களா? – சுரேந்திரன் அதிர்ச்சி

குண்டர் கும்பல்களில் ஈடுபடுவோரில் 71 சதவீதம் இந்தியர்களா? – சுரேந்திரன் அதிர்ச்சி

547
0
SHARE
Ad

N-Surendranபெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 26 – மலேசியாவில் குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களில் 71 விழுக்காட்டினர் இந்தியர்கள் என்று காவல்துறை அறிவித்திருப்பது நம்பும் வகையில் இல்லை என்றும், காவல்துறை இனவாதத்தைப் பின்பற்றுவதாகவும் பிகேஆர் உதவித்தலைவர் என்.சுரேந்திரன்(படம்) அறிக்கை விடுத்துள்ளார்.

நாட்டிலுள்ள மக்கள் தொகையில் சுமார் 7 விழுக்காடு தான் இந்தியர்கள் உள்ளார்கள். ஆனால் குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் 71 விழுக்காடு இந்தியர்கள் உள்ளார்கள் என்று கூறுவது அதிர்ச்சி அளிக்கும் தகவல் என்று சுரேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்தியர்களை மட்டுமே குறி வைத்து காவல்துறை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால் தான் இந்தளவு எண்ணிக்கையை அவர்களால் வெளியிட முடிகிறது என்றும் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice