Home வாழ் நலம் தோலுக்கு மினு மினுப்பை தரும் சைவ உணவுகள்!

தோலுக்கு மினு மினுப்பை தரும் சைவ உணவுகள்!

795
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஆக. 26- சைவ உணவுகள் எடுத்துக்கொள்வது நமது உடல் நலனுக்கு எந்தெந்த வகையிலெல்லாம் நல்லது என்பது குறித்து மருத்துவ மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் தரும் விளக்கம் இங்கே:-

fruits and veggies borderநச்சுக்களை அகற்றுபவை:-

நார்சத்து மிகுந்த சுரைக்காய், பூசணி, பசலைக்கீரை மற்றும் முட்டைகோஸ் ஆகியவை சைவ உணவ வகைகளில் மிக முக்கியமானவை.

#TamilSchoolmychoice

உடலில் சேரும் நச்சுகளை அகற்றும் திறன் மேற்கூறிய காய்கறிகளுக்கு உண்டு.

அதே சமயம் முட்டை, மீன் மற்றும் இறைச்சி போன்றவற்றில் புரதச்சத்து இருக்கும் அளவுக்கு நார்ச்சத்து இருப்பதில்லை.

எலும்புகளை வலுவாக்குபவை:-

இறைச்சி உடலில் புரதத்தை அதிகமாக்கி, கொழுப்பை கூட்ட வழி வகுக்க கூடியது.

மேலும் நமது சிறுநீரகத்திற்கு அதிக வேலைப் பளுவை ஏற்படுத்த செய்வதோடு, எலும்பிலுள்ள கால்சியத்தையும் உறிஞ்சி விடுகிறது.

அதே சமயம் சைவ உணவில் இந்த பிரச்சினை இல்லை. எனவே, சைவ உணவானது எழும்புகளை வழுவாக்குவதோடு, உடம்பில் கொழுப்பு சேருவதை தடுக்கிறது.

vegetables_wallpapers_031-1280x800மாவுச்சத்து பற்றாக்குறை:-

அசைவ உணவு அதிகம் எடுத்துக்கொள்பவர்களுக்கு மாவுச்சத்து  பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பும் அதிகம் உண்டு.

இதனால் உடல் தனது இயக்கத்திற்கு தேவையான சக்தியை மாவுச்சத்து  பெறுவதற்கு பதிலாக சேமித்து வைக்கப்பட்டுள்ள கொழுப்பிலிருந்து எடுத்துக்கொள்ளும் கீட்டோனியம் என்ற நிலை ஏற்படும். ஆகவே, இந்த நிலையிலிருந்து விடுபட சைவ உணவுகளாகிய காய்கறிகளும் பழங்களும் சாப்பிடலாம்.

எளிதில் செரிமானம்:-

சைவ உணவுகள் மூலமாக கிடைக்கும் மாவுச்சத்து படிப்படியாக  செரிமனமாக்க உடலுக்கு தேவையான குளுகோஸ் சத்தை சீராக அளிக்கும்.

காய்கறிகளிலும் பழங்களிலும் அதிகப்படியான நார்ச்சத்து இருப்பதனால், உண்ட உணவு செரிமானமாக்க உதவுகிறது. இதனால் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வழிவகுக்கிறது.

அதே சமயம் கொழுப்பும், புரதமும் அதிகம் நிறைந்த இறைச்சி உணவு செரிமானமாகவே அதிக நேரம் எடுத்துக்கொள்ளும்.

சில சிமயங்களில் சிலருக்கு அது சிரமமாக கூட ஆகிவிடும்.

ஆரோக்கியமான மேனி:-

பீட்ரூட், தக்காளி, பூசணி, பாகற்காய் போன்ற சைவ உணவுகள் ரத்தத்தை நன்கு சுத்திகரிப்பதோடு, தோலுக்கு மினு மினுப்பையும் கொடுக்கிறது.

அத்துடன் கொய்யா, ஆப்பிள், பேரிக்காய் போன்ற பழங்களை உண்பதும் மேனிக்கு மினுமினுப்பை கூட்டும்.