லண்டன், ஆக. 27– இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்– டயானா தம்பதியின் 2–வது மகன் ஹாரி (வயது 28).
இவர் ராணுவத்தின் விமான படையில் அப்பாச்சி உலங்கு வானூர்தியில் விமானியாக இருக்கிறார்.
கடந்த ஆண்டு மே மாதம் இவருடன் பல இடங்களில் சுற்றித்திரிந்தார். எனவே, இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என பேச்சு எழுந்தது.
இது குறித்து, இளவரசர் ஹாரியிடமும் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் இது வேடிக்கையாக (‘ஜோக்’ ஆக) உள்ளது என கூறி மழுப்பலாக மறுத்தார்.
இந்த நிலையில், இவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெறும் என்ற பேச்சு கிளம்பியுள்ளது.
அதற்கான அறிவிப்பு இந்த ஆண்டு இறுதியில் அதிகாரபூர்வமாக வெளியாகும் என அரசு குடும்ப வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.