Home கலை உலகம் என்னுடைய படங்களில் இனி லுங்கி நடனம் இருக்கும்: தனுஷ்

என்னுடைய படங்களில் இனி லுங்கி நடனம் இருக்கும்: தனுஷ்

545
0
SHARE
Ad

ஆக. 27- தனுஷ் சமீபகாலமாக உணர்ச்சிவயப்படுபவராக மாறி உள்ளார்.

அவர் இப்போதெல்லாம் சினிமா விழாக்களுக்கு வேஷ்டி, சட்டை அணிந்துதான் வருகிறார்.

அவரிடம் ஏன் வேஷ்டி, சட்டையுடன் கலந்து கொள்கிறீர்கள் என்று கேட்டதற்கு, நான் ஒரு தமிழன்.

#TamilSchoolmychoice

தமிழரின் பாரம்பரிய உடையான வேஷ்டி, சட்டையை அணிவதில் பெருமைப்படுகிறேன் என்று கூறி அனைவரின் வாயையும் அடைத்து விடுகிறார்.

photos-2012-12-6-8-16-58சினிமா விழாக்கள் தவிர்த்து இனிமேல் தான் நடிக்கும் படங்களிலும் ஒரு காட்சியிலாவது வேஷ்டி, சட்டை அணிந்து நடிக்கவேண்டும் என தனுஷ் முடிவு செய்துள்ளார்.

வேஷ்டி, சட்டையை தவிர, தான் நடிக்கும் படங்களில் ஒரு பாட்டுக்காவது லுங்கி கட்டி ஆடுவது எனவும் தீர்மானித்துள்ளார்.

இதுகுறித்து தனுஷ் கூறும்போது, என்னுடைய பல படங்களில் லுங்கி கட்டி நடித்துள்ளேன். அதிலும் குறிப்பாக ‘ஆடுகள’த்தில் ஒரு பாட்டு முழுவதும் லுங்கி கட்டித்தான் ஆடினேன். அது பெரும்பாலானவர்களுக்கு பிடித்திருந்தது. அந்த  நடனத்தை கிராமத்து மக்கள் பார்த்துவிட்டு என்னை தங்களில் ஒருவராகவே நினைத்தார்கள் என்று கூறினார்.

அதனால்  இனிவரும் படங்களில் ஒரு பாடலுக்காவது லுங்கி கட்டி ஆடுவது என தனுஷ் முடிவு செய்துள்ளார்.