Home நாடு அவசரகால சட்டம் அகற்றப்பட்ட பிறகு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இரு மடங்காக அதிகரித்துள்ளன – காவல்துறை...

அவசரகால சட்டம் அகற்றப்பட்ட பிறகு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இரு மடங்காக அதிகரித்துள்ளன – காவல்துறை அறிக்கை

544
0
SHARE
Ad

ambank founderகோலாலம்பூர், ஆகஸ்ட் 28 –  நாட்டில் அவசரகால சட்டம் (Emergency Ordinance) அகற்றப்பட்ட பிறகு தான் கொலைகளும், கொலை முயற்சிகளும் இரு மடங்கு அதிகரித்துள்ளதாக காவல்துறை அறிக்கைகள் கூறுகின்றன.

கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறை தலைவர் ஹாடி ஹோ அப்துல்லா இந்த அறிக்கையை வெளியிட்டார்.

அவசரகாலச் சட்டம் அகற்றப்படுவதற்கு முன்னர் கடந்த ஜூன் 21, 2010 ல் இருந்து டிசம்பர் 21, 2011 வரை துப்பாக்கிச் சூட்டினால் 57 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் அவசரகாலச் சட்டம் அகற்றப்பட்ட பிறகு கடந்த டிசம்பர் 22, 2011 ல் இருந்து ஜூன் 26,2013 வரை துப்பாக்கிச் சூட்டினால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 116 ஆக உயர்ந்துள்ளது.

#TamilSchoolmychoice

அதே நேரத்தில் அவசரகால சட்டம் அகற்றப்படுவதற்கு முன்னர்  31 கொலை முயற்சிகள் நடந்துள்ளதாகவும், அவசரகாலச் சட்டம் அகற்றப்பட்ட பிறகு 63 கொலை முயற்சி சம்பவங்கள் நடத்தப்பட்டுள்ளன என்றும் காவல்துறை கூறுகிறது.

இந்த காலக்கட்டத்தில் பொதுவான குற்றங்கள் குறைந்திருந்தாலும், கொலை, வழிப்பறிக் கொள்ளை, கொலை முயற்சி ஆகியவை அதிகரித்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.