Home நாடு 49 குண்டர் கும்பல்களின் பட்டியலை வெளியிட அரசாங்கம் முடிவு!

49 குண்டர் கும்பல்களின் பட்டியலை வெளியிட அரசாங்கம் முடிவு!

577
0
SHARE
Ad

_69282723_parangகோலாலம்பூர்,ஆகஸ்ட் 29 – நாட்டிலுள்ள 49 குண்டர் கும்பல்களின் பட்டியலை வெளியிடுவது என இன்று காலை அரசாங்கம் முடிவெடுத்திருக்கிறது.

இது குறித்து பிரதமர் நஜிப் துன் ரசாக் கூறுகையில், “ இது ஒரு மாய வேட்டை இல்லை. மக்கள் என்ன விரும்பினார்களோ அதைத் தான் வெளியிடுகிறோம். நாட்டில் குற்றங்கள் குறைந்து அமைதி நிலவ வேண்டும் என்றால் இதை செய்து தான் ஆக வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

ஓப்ஸ் கந்தாஸ் நடவடிக்கை தொடங்கப்பட்ட பிறகு, நாட்டில் நடைபெற்ற அதிரடி தேடுதல் வேட்டையின் படி, அனைத்து குண்டர் கும்பல்களின் பட்டியலையும் வெளியிட முடிவெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice